»   »  சச்சின் படம் பார்க்க ரஜினியை அழைத்த டெண்டுல்கர்!

சச்சின் படம் பார்க்க ரஜினியை அழைத்த டெண்டுல்கர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பையில் காலா படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த்தை, தான் நடித்துள்ள சச்சின் - எ பில்லியன் ட்ரீம் படத்தைப் பார்க்க அழைத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

பா ரஞ்சித் இயக்கத்தில் காலா கரிகாலன் படத்தில் நடிக்க மும்பையில் முகாமிட்டுள்ளார் ரஜினிகாந்த். இன்னும் இரு வாரங்கள் தங்கி இந்தப் படத்தில் நடிக்கிறார். அங்கு படப்பிடிப்பு முடிந்ததும், சென்னை திரும்பும் ரஜினி, பூந்தமல்லி அருகே போடப்பட்டுள்ள செட்டில் மீதிக் காட்சிகளில் நடிக்கிறார்.

Tendulkar invites Rajini to watch 'Sachin'

மும்பையில் உள்ள ரஜினியைப் பார்க்க, சந்திக்க ஏராளமான பிரபலங்கள் வந்து செல்கின்றனர். மும்பையில் உள்ள ரசிகர்கள் தாராவியை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியான தனது சச்சின் - எ பில்லியன் ட்ரீம் படத்தைக் காண வருமாறு ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். மேலும் தனது வீட்டுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்றோ நாளையோ சச்சின் படத்தை ரஜினி பார்க்கக் கூடும்.

English summary
Cricket Icon Sachin Tendulkar has invited Superstar Rajinikanth to watch his Sachin movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil