twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டைரக்டர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று கிடையாது...சோதனையில் உறுதியானது

    |

    சென்னை : இந்தியாவின் தலைசிறந்த டைரக்டர்களில் ஒருவராக இருப்பவர் மணிரத்னம். டைரக்டர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் என பலவற்றிலும் தனது திறமையை நிரூபித்து வருபவர்.

    1983 ம் ஆண்டு பல்லவி அனுபல்லவி என்ற கன்னட படத்தின் முலம் டைரக்டராக அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல மொழிகளிலும் பல பிளாக் பஸ்டர் படங்களை இயக்கி பல விருதுகளை வென்றவர்.தமிழில் இவர் இயக்கிய முதல் படம் பகல் நிலவு.

    1980 கள் துவங்கி தற்போது வரிசையாக ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி, ரோஜா, பம்பாய், இருவர், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால்,அலைபாயுதே, ஆய்த எழுத்து, குரு, ராவணன், ஓ காதல் கண்மணி ஆகிய படங்களை இயக்கி இந்திய சினிமாவில் தனிக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

    நிர்வாணமாக நடிக்க தயார்..சீரியல் நடிகை ரேகா நாயர் அதிரடி முடிவு!நிர்வாணமாக நடிக்க தயார்..சீரியல் நடிகை ரேகா நாயர் அதிரடி முடிவு!

    பலரின் கனவை நினைவாக்கிய மணிரத்னம்

    பலரின் கனவை நினைவாக்கிய மணிரத்னம்

    தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக பெரும் முயற்சி எடுக்கப்பட்டு நிறைவேறாமல் போன கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் களமிறங்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.இந்திய சினிமாவின் பிரபலமான நட்சத்திரங்களை வைத்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி முடித்துள்ளார்.

    ரிலீசிற்கு தயாரான பொன்னியின் செல்வன்

    ரிலீசிற்கு தயாரான பொன்னியின் செல்வன்

    இந்திய சினிமாவின் அடையாளமாகவும், தமிழ் சினிமாவின் பெருமையாகவும் கருதப்படும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் டைரக்டர் மட்டுமின்றி, தயாரிப்பாளரும் இவர் தான். அந்த வகையில் படத்தின் ரிலீசிற்கான ஏற்பாடுகளை கவனித்து வந்தார்.

    40 ஆண்டு கால கனவு

    40 ஆண்டு கால கனவு

    ஜூலை 8 ஆம் தேதி படத்தின் டீசர் வெளியிட்டு விழா பிரமாண்டமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இதில் பேசிய மணிரத்னம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இதை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறேன் என்றும், இதனை படமாக்க 3 தடவை முயன்றுள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார்.

    மணிரத்னத்திற்கு கொரோனா கிடையாது

    மணிரத்னத்திற்கு கொரோனா கிடையாது

    இந்நிலையில் இன்று காலை டைரக்டர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. இதைனயடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மணிரத்னம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.ஆனால் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

    Recommended Video

    Filmmaker Mani Ratnam-க்கு கொரோனா பாதிப்பு | தனியார் மருத்துவமனையில் அனுமதி *TamilNadu
    சுகாசினி என்ன சொன்னார்

    சுகாசினி என்ன சொன்னார்

    தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த மணிரத்னத்தின் மனைவி சுகாசினி மணிரத்னத்திற்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று காலை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் தன்னுடைய தந்தைக்கு 92 வயது, அதே போல் தாய்க்கு 88 வயது.எனவே தனிமைப்படுத்துவது அவசியம் என்பதால் மருத்துவமனையில் இருக்கிறோம் .அவர் நலமாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

    English summary
    Test results confurmed that director Maniratnam didn't affected by Covid. But his wife Suhasini explained that he had mild fever. So for the saftey purpase and quarantine, he admitted in hospital at Chennai. Currently Maniratnam is in final schedule of Ponniyin Selvan post production works.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X