»   »  தனுஷ் பட நஷ்டத்தை சரி கட்ட அஜீத்திடம் கால்ஷீட் கேட்ட தயாரிப்பாளர்

தனுஷ் பட நஷ்டத்தை சரி கட்ட அஜீத்திடம் கால்ஷீட் கேட்ட தயாரிப்பாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ், விக்ரம் பிரபு ஆகியோரின் படங்களால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய அஜீத்திடம் மீண்டும் கால்ஷீட் கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படம் தொடரி. ரயிலிலேயே எடுத்து வித்தியாசமாக காட்ட முயன்று தோற்ற படம்.

ரயிலிலேயே டான்ஸ் வருது, ஃபைட் வருது எனக்கு வாயில் நல்லா வருது என்று படத்தை பார்த்த ரசிகர்கள் திட்டித் தீர்த்தனர்.

சத்ரியன்

சத்ரியன்

தொடரியை அடுத்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சத்ரியன் படமும் ஓடவில்லை. இந்த இரண்டு படங்களை தயாரித்து நஷ்டத்தில் உள்ளது சத்யஜோதி பிலிம்ஸ்.

தயாரிப்பு

தயாரிப்பு

அஜீத்தின் விவேகம் படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் தான் தயாரித்துள்ளது. இந்த ஒரு படத்தின் லாபத்தை வைத்து மட்டும் தொடரி, சத்ரியனால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்ட முடியாது.

அஜீத்

அஜீத்

தொடரி, சத்ரியனால் படுநஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதை சரி கட்ட மீண்டும் எங்கள் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்று டி.ஜி. தியாகராஜன் அஜீத்திடம் கேட்டுள்ளாராம்.

விவேகம்

விவேகம்

அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ள விவேகம் வரும் 24ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தை பார்க்க தல ரசிகர்கள் பேராவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
TG Thyagarajan has reportedly asked Ajith to do one more film under Sathya Jyothi films banner after Dhanush' Thodari and Vikram Prabhu's Sathriyan are a loss to it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil