»   »  'தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்கு சென்சார் சான்றிதழ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்கு சென்சார் சான்றிதழ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'சிங்கம் 3' படத்திற்குப் பிறகு சூர்யா நடித்து வெளியாக இருக்கும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும், ரம்யா கிருஷ்ணன், செந்தில், சரண்யா, கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, சத்யன் என மிகப்பரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

விக்னேஷ் சிவன் இயக்கிவரும் இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் டீசர் வரும் கடந்த நவம்பர் 30-ம் தேதி வெளியானது. படத்தின் மூன்று பாடல்களும் வெளியாகி இருக்கின்றன.

Thaana serndha koottam censor certificate

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்ற 'சொடக்கு மேல சொடக்கு...' பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சூர்யா ரசிகர்கள் இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் டீசர் வெளியானதுமே, இப்படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'ஸ்பெஷல் 26' படத்தின் காப்பி எனக் கூறப்பட்டது. சமூக வலைதளங்களில் பலரும் இந்தப் படம் 'ஸ்பெஷல் 26' படத்தின் அப்பட்டமான காப்பி எனக் கூறி வருகிறார்கள்.

இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 32 நிமிடங்கள் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில், 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
'Thaana serndha koottam' gets 'U/A' certificate from censor board. The Running time of Suriya's 'Thaana Serndha Koottam' movie is 2 hours and 32 minutes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X