»   »  சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' ரன்னிங் டைம்

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' ரன்னிங் டைம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'சிங்கம் 3' படத்திற்குப் பிறகு சூர்யா நடிப்பில் தயாராகி வரும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கிவரும் இப்படம் நிறைய பிரச்சனைகளைச் சந்தித்து வந்தது.

இந்நிலையில் படம் மிகவும் விறுவிறுப்பாக பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் டீசர் வரும் நவம்பர் 30-ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு ஒரு போஸ்டர் மூலம் தெரிவித்திருந்தனர்.

 Thaana serndha koottam running time

நயன்தாரா பிறந்தநாளன்று டைரக்டர் விக்னேஷ் சிவனை டீசர் பற்றிய அறிவிப்பை வெளியிடுமாறு நச்சரித்து வந்தனர். அன்று மாலையே டீசர் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 32 நிமிடங்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. விரைவில் படம் தணிக்கைக் குழுவினருக்கு அனுப்பப்பட்டு உறுதியான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The Running time of Suriya's 'Thaana Serndha Koottam' movie is 2 hours and 32 minutes. This film's teaser will be released on November 30th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil