»   »  சூர்யா, அனிருத் ரசிகர்களுக்கு புது வருச ட்ரீட்..! #TSKUpdate

சூர்யா, அனிருத் ரசிகர்களுக்கு புது வருச ட்ரீட்..! #TSKUpdate

Posted By:
Subscribe to Oneindia Tamil
சூர்யா ரசிகர்களுக்கு அனிருத்தின் நியூ இயர் ட்ரீட் !!- வீடியோ

சென்னை : ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இப்படம், சூர்யா, கார்த்திக், கீர்த்தி சுரேஷ், செந்தில், கலையரசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது.

'நானும் ரௌடி தான்' படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. சூர்யா ரசிகர்கள் பெரிய வெற்றிக்காக இந்தப் பட ரிலீஸுக்கு காத்திருக்கிறார்கள்.

Thaana serndha koottam songs release today

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கெனவே 'சொடக்கு மேல சொடக்கு போடுது' எனும் பாடல் வெளியாகி ஹிட்டான நிலையில், மேலும் இரண்டு பாடல்களும் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர் கடந்த நவம்பர் 30-ம் தேதி வெளியிடப்பட்டது. படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 'தானா சேர்ந்த கூட்டம்' பொங்கல் ரிலீஸாக திரைக்கு வர இருக்கிறது.

படத்தின் அனைத்துப் பாடல்களும் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் விக்னேஷ் சிவனை நச்சரித்து வந்தனர். இந்நிலையில், படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களும் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இசையமைப்பாளர் அனிருத் படத்தின் பாடல்கள் வெளியீடு தொடர்பாக ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பாடல் சஸ்பென்ஸாக வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Vignesh Shivan is directing the film 'Thaana serndha koottam' lead by Surya, Karthik, Keerthi Suresh, Senthil and others. All the songs in this film will be released today. Anirudh has released a video on his Twitter page on the release of the songs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X