»   »  கபாலி... சென்சார் ஆகும் வரை 'கம்'முனு இருங்கப்பா! - கலைப்புலி தாணு

கபாலி... சென்சார் ஆகும் வரை 'கம்'முனு இருங்கப்பா! - கலைப்புலி தாணு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி ரிலீஸ் தேதி குறித்து வெளியாகும் பல்வேறு தகவல்களை அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மறுத்துள்ளார்.

படம் தணிக்கை செய்த பிறகுதான் ரிலீஸ் தேதி பற்றிப் பேச முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Thaanu denies reports on Kabali postponement

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் பிரான்ஸ் திரையரங்கமான ரெக்ஸ் சினிமாஸில் ஜூலை 14 அன்று திரையிடப்படவுள்ளது. இத்தகவலை ரெக்ஸ் சினிமா அறிவித்துள்ளது.

பாரிஸில் உள்ள இந்தத் திரையரங்கம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அரங்கம் ஆகும். ஒரே சமயத்தில் 2800 அமர்ந்து படம் பார்க்கமுடியும். ஜூலை 14 அன்று பிரீமியர் காட்சி நடைபெற உள்ளதால் அடுத்த நாள் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

அதே போல ஜூலை 15-ம் தேதி ஏர் ஏசியா நிறுவனம் கபாலி முதல் ஷோ பார்க்க பெங்களூரிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானம் இயக்குகிறது. இது கபாலி ரிலீஸ் தேதி ஜூலை 15தான் என்பதை உறுதியாக்கியது.

இந்த நிலையில் படத்தின் வெளியீடு தள்ளிப் போய்விட்டதாக சிலர் தகவல் பரப்ப ஆரம்பித்துள்ளனர். கபாலி ரிலீஸ் தள்ளிப் போய்விட்டது என நேற்று முதல் தகவல் பரப்பி வருகின்றனர்.

ஆனால் இவை அனைத்தையும் கலைப்புலி தாணு மறுத்துள்ளார்.

"படம் இன்னும் தணிக்கை செய்யப்படவில்லை. ஆனால், அதற்கு முன்பே வெளியீட்டுத் தேதி குறித்து பேசுகிறார்கள். இது விதிமுறைக்கு எதிரானது. படம் தணிக்கை ஆனபிறகே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்," என்று கூறியுள்ளார்.

கபாலியின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன. வரும் ஜூலை 1-ம் தேதி படம் தணிக்கைக்கு அனுப்பப்படும் எனத் தெரிகிறது.

English summary
Producer Kalaipuli Thaanu has denied all reports about the release date of Rajinikanth's Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil