»   »  பதுங்கும் நீயெல்லாம் பாயும் புலியா? - விஷாலை வெளுத்து வாங்கிய தாணு

பதுங்கும் நீயெல்லாம் பாயும் புலியா? - விஷாலை வெளுத்து வாங்கிய தாணு

Posted By:
Subscribe to Oneindia Tamil

தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.யாரும் எதிர்பார்க்காத நிலையில் ராதாகிருஷ்ணன் அணியும் டி.சிவா அணியும் இணைந்தது ட்விஸ்ட் என்றால் தமிழ் சினிமாவின் தல இப்போதைய தலைவர் கலைப்புலி எஸ். தாணுவே களத்தில் இறங்கி இரண்டு அணியையும் இணைத்தது சூப்பர் ட்விஸ்ட்டாகி போனது.

தமிழ் சினிமாவே பரபரப்பாக எதிர்பார்த்த இந்தக் கூட்டணியின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் விஷாலை வெளுத்து வனக்கினார் கலைப்புலி தாணு.

Thaanu is a coward tiger - Kalaipuli Thaanu

"இளைய தலைமுறைக்கு வழிவிட்டு நான் விலகியிருந்தேன். விஷாலின் பேச்சு, நடை, உடை, பாவனை பார்த்து தவறான முன் உதாரணமாகிவிடக் கூடாது என்றுதான் நான் இங்கு வந்தேன்.

தம்பி டி.சிவாவை முரளிதரன் முன் மொழிந்த போது சரி என்று நினைத்திருந்தேன். பலரும் ஏன் இத்தனை அணி என்று கேட்டார்கள். விஷாலின் யதேச்சதிகாரம், ஆணவம். அகங்காரம் கொஞ்ச நஞ்சமல்ல. அவரது நடவடிக்கை மிகவும் மோசமாக இருந்தது. தேசிய விருது பெற்ற சேரனுக்கு 5000 ரூபாய் தரச் சொல்கிறார்.

2012ல் 'நீதானே என் பொன் வசந்தம் ' படத்துக்கான சிக்கலில் கௌதம்மேனன் நின்ற போது ஒரு கோடி ரூபாய் நான் உதவி செய்தேன். 'பாயும்புலி' பட சிக்கல் வந்த போது விஷால் போனை ஆப் செய்து பதுங்கி விட்டார். பிரச்சினை வந்தால் பதுங்கும் நீயெல்லாம் பாயும் புலியா?

ஒரு முறை 50 லட்சரூபாய் பிரச்சினையில் என்னிடம் வந்து பவ்யமாகக் கெஞ்சினார். சங்கத்தில் சிரமப்படும் 1512 தயாரிப்பாளர்களில் 12 பேர் உன்னை வைத்துப் படமெடுத்தவர்கள். விஷால் தம்பி வாயை அடக்கிப் பேசு நாவடக்கம் தேவை. தம்பி விஷால் "மதகஜராஜா' 30 கோடி பிரச்சினையில் உள்ளது.

Thaanu is a coward tiger - Kalaipuli Thaanu

நீ என்ன புரட்சி செய்தாய்? புரட்சிதளபதி என்கிறாயே.. உன்னைப் பற்றி ஏராளமான புகார்கள் இருக்கின்றன. வரும் 26ஆம் தேதி ஆதாரங்களுடன் வெளியிடுவேன்.

ஞானவேல்ராஜா என்னென்னவோ பேசுகிறார் கொம்பன்' படத்துக்கு பிரச்சினை வந்தபோது அழுததும் நாங்கள் உதவியதும் நினைவில்லையா?

பிரகாஷ்ராஜ் ஏதேதோ பேசுகிறார் அவர் ஒழுங்காக நேரத்துக்குப் படப்பிடிப்பு போனதுண்டா? உங்கள் மேல் எவ்வளவு புகார்கள்?

இப்படிப்பட்டவர்களிடம் தயாரிப்பாளர் சங்கம் போகலாமா?''

இவ்வாறு தாணு பேசினார்.

தாணுவின் பேச்சு தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Kalaipuli Thaanu blasted actor Vishal as a coward tiger.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil