»   »  குற்றம் கடிதல தயாரிப்பாளர் கிறிஸ்டி சிலுவப்பனுக்கு கலைப்புலி தாணு பாராட்டு!

குற்றம் கடிதல தயாரிப்பாளர் கிறிஸ்டி சிலுவப்பனுக்கு கலைப்புலி தாணு பாராட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படத்தின் தயாரிப்பாளர் கிறிஸ்டி சிலுவப்பனுக்கு தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரவழைத்து, அதன் தலைவர் கலைப்புலி தாணு பாராட்டு தெரிவித்தார்.

இது குறித்து தயாரிப்பாளர் கிறிஸ்டி சிலுவப்பன் கூறுகையில், "எங்களது அறிமுக படைப்பான ‘குற்றம் கடிதல்' சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றமைக்கு தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் கலைப்புலி எஸ் தாணு வாழ்த்தினார்.

Thaanu wishes Kutram Kadithal producer

பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் வெளீயீட்டு தேதிகளை நெறிமுறைப் படுத்தப்படும் என்ற தயாரிப்பாளர் கவுன்சிலின் அறிவிப்பிற்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இந்த அறிவிப்பு சிறிய படங்களை லாபகரமாக வெளியிடுவதற்கு எங்களை போன்ற சின்ன தயாரிப்பாளர்களுக்கும் பெரிதும் உதவும். அனைத்து சிறு தயாரிப்பாளர்கள் சார்பாகவும் தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

முழு திரையுலகமே எங்களது முதல் படைப்பான ‘குற்றம் கடிதல்' திரைப்படத்திற்கு அளித்த ஆதரவும், வாழ்த்துக்களும் எங்களை மென்மேலும் நல்ல திரைப்படங்களை தயாரிக்க ஊக்கம் அளிக்கிறது," என்றார்.

English summary
Producer Council president Kalaipuli S Thaanu has invited Christy Siluvappan to the council and conveyed his wishes for his National Award won Kutram Kadithal.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil