சொகுசு படகில் சென்ற இளம் நடிகை ஆற்றில் விழுந்து மரணம்.. கொலையாக இருக்கும் என தாய் பரபரப்பு புகார்

தாய்லாந்து: பிரபல நடிகை ஒருவர் நண்பர்களுடன் சொகுசு படகில் சென்று கொண்டிருக்கும் போது ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தாய்லாந்தை சேர்ந்த இளம் நடிகை நிடா பட்சரவீரபாங் (Nida Patcharaveerapong) பிப்ரவரி 26ம் தேதி ஆற்றில் கவிழ்ந்து உயிரிழந்துள்ளார்.

ஆனால், இது விபத்து இல்லை என்றும் அவர் உயிருடன் இருக்கக் கூடாது என நினைத்த யாரோ தான் அவரை நீரில் தள்ளி விட்டு இருக்க வேண்டும் என நடிகையின் அம்மா பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

தாய்லாந்து நடிகை

தாய்லாந்து நடிகை

தாய்லாந்து நாட்டை சேர்ந்த நடிகை நிடா பட்சரவீரபாங் பல சினிமாக்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த 2019ல் வெளியான தி ஃபாலன் லீஃப் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் திடீரென உயிரிழந்த செய்தி அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஆற்றில் விழுந்து மரணம்

ஆற்றில் விழுந்து மரணம்

37 வயதாகும் இந்த இளம் நடிகை தனது நண்பர்களுடன் பாங்காங்கில் உள்ள நொந்தம்புரி மாகாணத்தில் உள்ள ரமா செவன் பாலம் இருக்கும் சாவோ ப்ராயா ஆற்றில் தனது மேனேஜர் மற்றும் நண்பர்களுடன் சொகுசு படகில் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி ஆற்றில் விழுந்து இவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

லைஃப் ஜாக்கெட் போடல

லைஃப் ஜாக்கெட் போடல

சொகுசு படகில் சுற்றுலா சென்ற நடிகை லைஃப் ஜாக்கெட் போடாமல் இருந்ததே அவர் உயிரிழக்க காரணம் என்று அவருடன் பயணித்த நண்பர்களும் அவரது மேனேஜரும் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்தால் அவர் உயிருடன் இருந்திருப்பார் என்றும் கூறியுள்ளனர்.

நம்பாத அம்மா

நம்பாத அம்மா

ஆனால், இது ஒரு திட்டமிட்ட கொலை என்று நடிகையின் அம்மா போலீஸில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். தனது மகள் பல முறை ஏகப்பட்ட இடங்களுக்கு ரொம்பவே பத்திரமாக சென்று வந்திருக்கிறார். அவர் உயிருடன் இருக்கக் கூடாது என நினைத்த யாரோ ஒருவர் தான் அவரை வேண்டுமென்றே தள்ளி விட்டு இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அம்மாவின் புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X