»   »  தாக்க தாக்க தாக்கம் அதிகம்- விக்ராந்தை தாங்கிப் பிடிக்கும் ரசிகர்கள்

தாக்க தாக்க தாக்கம் அதிகம்- விக்ராந்தை தாங்கிப் பிடிக்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விக்ராந்த், தொடர்ந்து இவரின் நடிப்பில் வெளிவந்த எங்கள் ஆசான் மற்றும் முத்துக்கு முத்தாக போன்ற படங்கள் சரியாக ஓடவில்லை.

தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருந்த விக்ராந்திற்கு,விஷால் தனது பாண்டிய நாடு படத்தில் வாய்ப்புக் கொடுத்தார்.


பாண்டியநாடு நன்றாகப் போனதில் விக்ராந்தின் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த படத்தை தூசு தட்டி எடுத்து, தாக்க தாக்க என்று பெயர் மாற்றம் செய்து தற்போது வெளியிட்டு இருக்கின்றனர்.


விக்ராந்த் அண்ணன் சஞ்சீவ் இயக்க நட்பிற்காக ஆர்யா, விஷால் மற்றும் விஷ்ணு ஆகியோர் ஒரு பாடலுக்கு நடனமாட, சற்றே தெம்புடன் வெளிவந்திருக்கிறது தாக்க தாக்க திரைப்படம்.


தாக்க தாக்க ரசிகர்களை எந்த அளவிற்கு கவர்ந்து இருக்கிறது என்பதை அவர்களின் ட்விட்டர் பதிவுகளில் இருந்து இங்கே பார்க்கலாம்....


ஆக்க்ஷன் த்ரில்லர்

"தாக்க தாக்க விக்ராந்தின் நடிப்பு ஆவேசம், திரைக்கதையும் நன்றாக அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆக்க்ஷன் கலந்த த்ரில்லராக இன்று வெளியாகியிருக்கும் தாக்க தாக்க படம் சூப்பர்"என்று கூறி விக்ராந்தின் நடிப்பையும், படத்தையும் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் தரணி பிரகாஷ்.


தாக்க தாக்க நம்பிக்கை

"தாக்க தாக்க 100% நம்பிக்கையுடன் வெளிவந்திருக்கும் இப்படம் காதல், நட்பு மற்றும் கிரைம் என்ற மசாலாவை சரிவிகிதமாக கலந்து வெளிவந்திருக்கிறது. தாக்க தாக்க பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார்"புலி நேஷனல் பிரின்ஸ்.


விஜய்க்கு நன்றியுடன்

தாக்க தாக்க படம் வெளியாவதற்கு விஜய் உதவி செய்ததால் படத்தின் ஆரம்பத்தில் விஜய்க்கு நன்றி தெரிவித்து இருக்கின்றனர் தாக்க தாக்க படக்குழுவினர். இதனை சுட்டிக் காட்டியிருக்கிறார் செல்வா.


கடைசி 30 நிமிடங்கள்

"தாக்க தாக்க தெறி மாஸ் கடைசி 30 நிமிடங்கள் நன்றாக இருக்கிறது" என்று படத்தையும், விக்ராந்தையும் ஒருசேர பாராட்டியிருக்கிறார் பர்ஹான்.


நல்ல திரைப்படம்

"தாக்க தாக்க நல்ல ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்திருக்கிறது, படத்தின் 2 ம் பாதி தாறுமாறு" என்று படத்தை புகழ்ந்திருக்கிறார் நீரஜித்.


தளபதியின் தம்பிடா

"விக்ராந்தின் நடிப்பு சூப்பர் மீண்டும் ஒருமுறை விஜயின் தம்பி என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்" என்று கூறியிருக்கிறார் ஜான்பால்.


நிச்சயம் சூப்பர்ஹிட்

"விக்ராந்தின் நடிப்பு தாக்க தாக்க திரைப்படத்தில் மிகவும் நன்றாக அமைந்திருக்கிறது, படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாக மாறும்" என்று படத்தில் விக்ராந்தின் நடிப்பை பாராட்டியிருக்கிறார் ரவி.


English summary
Thakka Thakka Movie - Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil