»   »  இதுவா அதுவா, இதுவா அதுவா: தலையை பிச்சுக்கும் தல ரசிகர்கள்

இதுவா அதுவா, இதுவா அதுவா: தலையை பிச்சுக்கும் தல ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல 57 படத்தின் தலைப்பு வதமா, விவேகமா என்று தெரியாமல் அஜீத் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் தல 57. படப்பிடிப்பு குறித்து செய்திகள் வெளி வருகிறதே தவிர படத்தின் தலைப்பு குறித்து சிவா வாய் திறக்க மறுக்கிறார்.

தலைப்பு என்ற வார்த்தையை கூட உச்சரிக்க மாட்டேன் என அடம்பிடிக்கிறார் சிவா.

தலைப்பு

தலைப்பு

படத்தின் தலைப்போ, ஃபர்ஸ்ட் லுக்கோ தெரியாமல் தல ரசிகர்கள் கடுப்பில் உள்ளார்கள். காணோம் காணோம் சிவா சாரை காணோம் என்று ட்வீட் செய்கிறார்கள்.

அறிவிப்பு

அறிவிப்பு

தல ரசிகர்கள் கடுப்பில் இருக்கும் நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு குறித்து பிப்ரவரி 2ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

விவேகம்

விவேகம்

வீரம், வேதாளம் படங்களை போன்றே தல 57 படத்தின் தலைப்பும் வி என்ற எழுத்தில் தான் துவங்கும் என்று கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு வதம் அல்லது விவேகமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகமாம்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

வதம் அல்லது விவேகம் மட்டும் அல்ல வியூகம் என்று தலைப்பு வைத்தால் கூட நன்றாக இருக்கும் என்று அஜீத் ரசிகர்கள் ட்வீட்டி வருகிறார்கள். அஜீத் பட தலைப்பு வி என்ற எழுத்தில் துவங்குவது இது ஒன்றும் புதிது அல்ல.

English summary
Buzz is that Thala 57 will have a title starting with the letter V. Ajith fans are eager to know the title soon.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil