»   »  தல 57: அஜீத்துடன் ஜோடி போடும் 'தில்வாலே' நாயகி

தல 57: அஜீத்துடன் ஜோடி போடும் 'தில்வாலே' நாயகி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கப்போகும் புதிய படத்தின் நாயகியாக பாலிவுட் நாயகி கீர்த்தி சனோனை ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

வேதாளம் படத்திற்குப் பின் காலில் ஆபரேஷன் செய்துகொண்ட அஜீத் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.அடுத்ததாக இவர் சிறுத்தை சிவா, விஷ்ணுவர்த்தன் இருவருடைய படங்களிலும் அஜீத் விரைவில் நடிக்கவிருக்கிறார்.

Thala 57: Kriti sanon is co Star to Ajith

இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் அஜீத்தின் ஜோடியாக பாலிவுட் நாயகி கீர்த்தி சனோனை நாயகியாக படக்குழுவினர் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் ஜோடியாக 'நேநோக்கடைன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இந்த கீர்த்தி சனோன். மேலும் சமீபத்தில் வெளியான ஷாரூக்கானின் 'தில்வாலே' படத்திலும் கீர்த்தி நடித்திருந்தார்.

நடித்தது 4 படங்கள் என்றாலும் மகேஷ்பாபு, ஷாரூக்கான் ஆகியோரின் படங்களில் நடித்திருப்பதால் தங்களது படங்களில் கீர்த்தியை நாயகியாக்க பல்வேறு தரப்பினரும் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் அஜீத் படத்தின் மூலம் தமிழில் பிரவேசம் செய்யப்போகிறது இந்த அழகுப்புயல். சிறுத்தை சிவா- அஜீத் 3 வது முறையாக இணையும் படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

இதில் ஒரு அஜீத்திற்கு ஜோடியாக கீர்த்தி சனோனை படக்குழுவினர் ஓகே செய்திருக்கின்றனர்.மற்றொரு நாயகி பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை.

தற்போதைய நிலவரப்படி முன்னணி நாயகி ஒருவரை ஜோடியாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றனவாம். அசல் படத்திற்குப் பின்னர் 6 வருடங்கள் கழித்து அஜீத் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பது அவரது ரசிகர்களிடையேயான மகிழ்ச்சியை அதிகப்படுத்தி இருக்கிறது.

Read more about: thala, ajith, அஜீத்
English summary
Sources Said Dilwale actress Kriti Sanon to Act as Heroine in Ajith - Siva's Next Film. The Official Announcement will be Expected Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil