»   »  அஜீத்தின் 'ஏகே 57': பல்கேரியாவில் தொடங்குது ஷூட்டிங்.. பொங்கலுக்கு பர்ஸ்ட் லுக்!

அஜீத்தின் 'ஏகே 57': பல்கேரியாவில் தொடங்குது ஷூட்டிங்.. பொங்கலுக்கு பர்ஸ்ட் லுக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் நடிக்கும் 57 வது படத்திற்கான படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் இருந்து துவங்கவிருக்கிறது.

சிறுத்தை சிவா-அஜீத் இணையும் 'தல 57' படத்திற்கான பூஜை சமீபத்தில் எளிமையாக நடைபெற்றது. பூஜையைத் தொடர்ந்து படப்பிடிப்பு மற்றும் வெளியீடு உட்பட பல்வேறு புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Thala 57 latest Updates

அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் பல்கேரியா நாட்டில் தொடங்கி மேலும் சில ஐரோப்பிய நாடுகளில் நடைபெறவுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை 2017ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிடுகின்றனர்.

மொத்த படப்பிடிப்பையும் முடித்து 2017ம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். நாயகியாக காஜல் அகர்வால் காமெடியனாக கருணாகரன் ஆகியோரை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.இந்நிலையில் சாய் பல்லவி இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப்போவதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆரம்பத்தில் அனுஷ்கா, ரித்திகா சிங் இருவரும் இப்படத்தின் ஹீரோயின்களாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said Thala 57 1st schedule starts in Bulgaria & few more Europe countries.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil