»   »  தல 57: செண்டிமெண்ட்டாக ஜூனில் தொடங்கும் படப்பிடிப்பு?

தல 57: செண்டிமெண்ட்டாக ஜூனில் தொடங்கும் படப்பிடிப்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் வியாழக்கிழமை செண்டிமெண்ட் காரணமாக, தல 57 படப்பிடிப்பு ஜூன் 9ல் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

வீரம், வேதாளம் படங்களுக்குப் பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் 3 வது முறையாக நடிக்கவுள்ளார்.

Thala 57 Shooting Start June Month

இப்படத்தின் இசையமைப்பாளராக வேதாளத்தில் பட்டையைக் கிளப்பிய அனிருத்தும், ஒளிப்பதிவாளராக வெற்றியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கிறார். கதாநாயகி மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படம் ஜூன் 9ம் தேதி தொடங்கப்படும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. எந்த ஒரு முக்கிய வேலையையும் அஜீத் வியாழக்கிழமைதான் தொடங்குவார்.

வேதாளம் படத்தின் பெயர், டீசர், பாடல்கள் என்று அனைத்துமே வியாழக்கிழமைதான் வெளியானது. அதனால் இந்தப்படத்தையும் வியாழக்கிழமை தொடங்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

பில்லா பாணியில் கேங்க்ஸ்டர் படமாக இப்படத்தின் கதையை சிறுத்தை சிவா உருவாக்கி இருக்கிறாராம். இதனால் இப்படத்தில் அஜீத் தனது பழைய கெட்டப்பிற்கு திரும்புவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்படத்தின் கதாநாயகி குறித்த விவரங்கள் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டானுக்கெல்லாம் டான்...

English summary
Sources Said Ajith's Next Movie will Start on June 9th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil