»   »  அனுஷ்கா-அஜீத்துடன் லண்டனில் தொடங்கும் தல 57?

அனுஷ்கா-அஜீத்துடன் லண்டனில் தொடங்கும் தல 57?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல 57 படத்தின் படப்பிடிப்பை சிறுத்தை சிவா லண்டனில் தொடங்கப் போவதாக கூறுகின்றனர்.

3 வது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கவிருக்கும் படம் தல 57. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Thala 57 Shooting Starts from July 15

சமீபத்தில் இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை சத்யஜோதி நிறுவனம் வெளியிடுவதாகக் கூறி கடைசி நேரத்தில் பின்வாங்கி விட்டது.

இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்படவுள்ளதாகக் கூறுகின்றனர். இதில் அனுஷ்கா,அஜீத் இருவரும் நடிக்கவுள்ளார்களாம்.

ஜூலை 15 ம் தேதி தல 57 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும், பெரும்பாலான பகுதிகளை வெளிநாடுகளில் படம்பிடிக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.

மற்றொருபுறம் 2 வது ஹீரோயினாக கீர்த்தி சனோன் அல்லது ரித்திகா சிங்கை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றதாம்.

படத்தின் கதையில் அஜீத் சில மாற்றங்களைச் சொன்னதால் தான் தல 57 படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் தல 57 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  English summary
  Sources Said Ajith's Thala 57 Shooting Starts from July 15 in London.
  Please Wait while comments are loading...

  Tamil Photos

  Go to : More Photos

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil