»   »  அஜீத் பிறந்தநாளில் தொடங்கும் தல 57?

அஜீத் பிறந்தநாளில் தொடங்கும் தல 57?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் அடுத்த படம் அவரது பிறந்தநாளான மே 1 ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆபரேஷனுக்குப் பின் அஜீத் தனது குடும்பத்தினருடன் வெளிநாடு சென்று ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் அஜீத் சிறுத்தை சிவாவுடன் இணையும் படம் எப்போது தொடங்கப்படும் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Thala 57 Shooting Starts from May 1

அதாவது அஜீத்தின் 45 வது பிறந்த நாளான மே 1 ல் தல 57 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்ந்து 3 மாதங்களில் அந்தப் படத்தை முடித்து விட்டு, ஆகஸ்ட் முதல் விஷ்ணுவர்த்தன் படத்தில் இணைய அஜீத் திட்டமிட்டிருக்கிறாராம்.

இதனால் தல 57 படத்திற்கான நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில் சிறுத்தை சிவா தற்போது மும்முரம் காட்டி வருகிறார்.

விரைவில் தல 57 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் 3 வது படம் தல 57 என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Ajith-Siruthai Siva's Thala 57 Shooting Starts from May 1 for Ajith Birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil