»   »  கூலா இருக்கும் அஜீத்தையே கோபப்பட வைத்த 'தல 57' படக்குழு

கூலா இருக்கும் அஜீத்தையே கோபப்பட வைத்த 'தல 57' படக்குழு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்பொழுதும் கூலாக இருக்கும் அஜீத்தையே 'தல 57' படக்குழு கோபம் அடைய வைத்துவிட்டதாம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் 'தல 57'. படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தலைப்பை டிசம்பர் மாதம் தான் வெளியிடுவார்களாம்.

அஜீத் இன்டர்போல் ஏஜெண்டாக நடித்து வரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடந்தது.

ஆஸ்திரிய பத்திரிகை

ஆஸ்திரிய பத்திரிகை

ஐரோப்பாவில் படப்பிடிப்பு நடந்தபோது ஆஸ்திரிய பத்திரிகை ஒன்று அஜீத்தின் 'தல 57' கெட்டப்பை புகைப்படத்துடன் போட்டு செய்தி வெளியிட்டது. அஜீத்தின் புகைப்படத்தை பார்த்து தல ரசிகர்கள் ஆளாளுக்கு மகிழ்ச்சி அடைந்தனர்.

அஜீத் புகைப்படம்

அஜீத் புகைப்படம்

படத்திற்காக அஜீத் ஜிம்முக்கு போய் கும்மென்று ஆகியுள்ளார் என்று செய்திகள் தான் வெளியாகின தவிர அவரது புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தான் வெளிநாட்டு பத்திரிகை புகைப்படத்தை வெளியிட்டது.

கோபம்

கோபம்

பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே ஆஸ்திரிய பத்திரிகைக்கு புகைப்படம் கிடைத்தது தெரிய வந்துள்ளது. இதனால் படக்குழுவின் பாதுகாப்பு குழுவினர் மீது அஜீத் கோபப்பட்டாராம்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

ஒழுங்காக வேலையை பாருங்கள். இனியும் இது போன்று ஏதாவது நடந்தால் நன்றாக இருக்காது என்று அஜீத் பாதுகாப்பு குழுவினரை எச்சரித்தாராம். கோலிவுட்டில் அஜீத்தின் பெயரை சொன்னால் அவரா பொறுமைசாலி மனுஷன் என்பார்கள். அவரையே கோபப்பட வைத்துவிட்டனர்.

English summary
'Thala 57' team has reportedly made Ajith lose his cool.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil