அஜித் பயங்கர அழகு சுந்தரன் என்பதால்அவர் வச்சதுதான் சட்டம் என நினைத்தேன்.ஆனால்ஒரு வெள்ளைக்கார குழந்தை

சென்னை: இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் மற்றும் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படங்களில் நடிகை சரண்யா நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து தன்னை பிசியாகவே வைத்துள்ள நடிகையாவார்.

இந்நிலையில் நடிகர் அஜித் பற்றி சரண்யா கொடுத்துள்ள பேட்டி ஒன்று தற்சமயம் வைரலாகியுள்ளது.

இந்தி அறிமுகம்

இந்தி அறிமுகம்

மலையாள இயக்குநர் ராஜ் என்பவரின் மகள்தான் சரண்யா. இயக்குநர் மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஏழு ஆண்டுகள் கழித்து நடிகர் சிம்பு நடித்த அலை திரைப்படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.

சரண்யா அம்மா

சரண்யா அம்மா

அந்தப் படத்தில் சிம்புவிற்கு அம்மாவாக நடித்த சரண்யா அதன் பின்னர் ராம், தவமாய் தவமிருந்து, கிரீடம் எம்டன் மகன், வேலையில்லா பட்டதாரி போன்ற பல படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துவிட்டார். 2017-ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் குணச்சித்திர நடிகைகளில் முதல் இடத்தில் இருந்தவர் சரண்யாதான். தற்சமயம் இந்தி திரைப்படத்தில் அறிமுகமாகும் சரண்யா தமிழில் 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு பாடல்களும் அவர் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரீடம்

கிரீடம்

கிரீடம் திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு அம்மாவாக நடித்திருப்பார் சரண்யா. நடிப்பதற்கு முன்னர் அஜித் மிகவும் அழகு சுந்தரன், பார்ப்பதற்கே கெத்தாக இருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் வைத்தது தான் சட்டம் என்று படப்பிடிப்பிற்கு முன்னர் சரண்யா நினைத்தாராம். ஆனால் அங்கு சென்ற பின்புதான் அஜித் எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் ஒரு குழந்தை போல் பழகக்கூடிய தங்கமான மனிதர் என்று தெரிய வந்ததாம்.

வெள்ளைக்கார அழகன்

வெள்ளைக்கார அழகன்

நம்மூரில் வெள்ளைக்காரன் போல் ஒரு நடிகரை காட்ட வேண்டும் என்றால் அவரை மட்டும்தான் காட்ட முடியும். ஒரு காட்சியில் அவர் பேச வேண்டிய வசனங்கள் மற்றவர்கள் பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்றினால் உடனே அடுத்தவர்களுக்கு வசனத்தை விட்டுக் கொடுத்துவிடுவார். எந்த ஒரு பெரிய நடிகரும் அப்படி செய்ய மாட்டார்கள். அந்த விஷயத்தைப் பொறுத்தவரை நான் அஜித்தை மிகவும் ரசித்துப் பார்த்தேன். அவர் மிகவும் நல்ல மனிதர் என்று மனதாரப் பாராட்டியிருக்கிறார் சரண்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X