தல தல தான்...அப்டேட் கூட இல்லாமல் அசத்தல் சாதனை படைத்த வலிமை...உற்சாகத்தில் ரசிகர்கள்

சென்னை : 2019 ல் வெளியான நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித், டைரக்டர் ஹச்.வினோத், தயாரிப்பாளர், போனி கபூர் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள படம் வலிமை. இந்த படத்தின் வேலைகள் துவங்கப்பட்டு 2 ஆண்டுகள் கடந்து விட்டது.

அஜித் ரசிகர்களும் அரசியல் தலைவர் முதல், வெளிநாட்டு கிரிக்கெட் மைதானம் சென்று வலிமை அப்டேட் கேட்டு பார்த்து விட்டனர். ட்விட்டரிலும் ஹேஷ்டாக் உருவாக்கி, தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தி விட்டனர்.

ஃபஸ்ட்லுக் கூட வரல

ஃபஸ்ட்லுக் கூட வரல

இருந்தும் இதுவரை படத்தின் அப்டேட் வெளியிடவோ, படம் முடிக்கப்படவோ இல்லை. ஃபஸ்ட்லுக் கூட இப்போ வருது, அப்போ வருது என சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

பாடல் அப்டேட் தந்த யுவன்

பாடல் அப்டேட் தந்த யுவன்

இந்த படத்திற்கு இசையமைத்துள்ள யுவன்சங்கர் ராஜா, கிளப்ஹவுஸ் டாக்கில் முதல் இன்ட்ரோ பாடல் பற்றி அப்டேட் வெளியிட்டார். இது அனைவரையும் ஆட்டம் போட வைப்பதாக இருக்கும் என்றும், இந்த படத்தில் அம்மா சென்டிசென்ட் பாடல் ஒன்றும் இருப்பதாக கூறினார்.

இந்த மாதமாச்சும் வருமா

இந்த மாதமாச்சும் வருமா

இதைத் தொடர்ந்து, ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த போஸ்டர்களில் படத்தின் ரிலீஸ் தேதியும் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.

சத்தமில்லாமல் சாதனை

சத்தமில்லாமல் சாதனை

இதற்கிடையில் எந்த இந்திய சினிமாவும் நிகழ்த்தாத சாதனையை அஜித்தின் வலிமை படம் சத்தமில்லாமல் நிகழ்த்தி உள்ளது. படத்தின் ஃபஸ்ட்லுக் உள்ளிட்ட எதுவும் வெளிவராமல், படத்தை எப்போது முடிப்பார்கள் என தெரியாத நிலையில், வலிமை படத்தை பார்க்க 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்துள்ளனர்.

முதல் இந்திய சினிமா

முதல் இந்திய சினிமா

புக் மை ஷோ (Book My Show) மூலம் இத்தனை லட்சம் பேர் இதுவரை எந்த இந்திய சினிமாவை பார்க்கவும் இதுவரை ஆர்வம் காட்டியதில்லையாம். இந்த புதிய சாதனையை வலிமை படம் நிகழ்த்தி உள்ளது. ஆன்லைனில் அதிகமாக சினிமா டிக்கெட் புக் செய்யப்பட்ட சாதனையை வலிமை நிகழ்த்தி உள்ளது.

இன்னும் சாதனை காத்திருக்கு

இன்னும் சாதனை காத்திருக்கு

இந்த தகவல் அஜித் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. இன்னும் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டு, படம் ரிலீசாவதற்குள் வலிமை படம் இன்னும் எத்தனை சாதனைகளை படைக்க போகிறதோ, எத்தனை சாதனைகளை முறியடிக்க போகிறதோ தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X