twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நேரடியாக மோதிய அஜித் - விஜய் படங்கள்..அதிகமுறை வென்றது யார்?..துணிவு-வாரிசு எது வெல்லும்?

    |

    அஜித், விஜய் நடிப்பில் வரும் பொங்கலுக்கு துணிவு, வாரிசு படங்கள் நேரடியாக மோதுகிறது.

    இதுவரை அஜித், விஜய் படங்கள் நேரடியாக பொங்கல், தீபாவளி, தமிழ் வருடப்பிறப்பு போன்ற நேரங்களில் மோதியுள்ளது. அதில் யார் படம் அதிகம் வெற்றிப் பெற்றது பார்ப்போம்.

    அஜித், விஜய் இருவரும் நட்புடன் இருந்தாலும், அவர்களது ரசிகர்கள் எம்ஜிஆர்-நம்பியார் போல் ஜென்ம பகையுடன் மோதிக்கொள்கின்றனர்.

    அசல் கோலாரின் சம்பளம்..பெண்களை தடவுவதற்கு லட்சக்கணக்கில் சம்பளமா? ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!அசல் கோலாரின் சம்பளம்..பெண்களை தடவுவதற்கு லட்சக்கணக்கில் சம்பளமா? ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!

    தமிழ் திரையுலகில் தொடரும் இரட்டையர் ஆதிக்கம்

    தமிழ் திரையுலகில் தொடரும் இரட்டையர் ஆதிக்கம்

    தமிழ் திரையுலகில் பாகவதர் காலத்தில் ஆரம்பித்து இரண்டு கதாநாயகர்கள், அவர்களிடையே போட்டி, அவர்கள் ரசிகர்கள் அடித்துக்கொள்வது என்பது தொடர்கதையாக உள்ளது. பாகவதர்-பியூ.சின்னப்பா, எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய் என தொடர்கிறது. இவர்களுக்கு பின் பெரிதாக பெரிய அளவில் வருமானம் ஈட்டக்கூடிய நடிகர்கள் இல்லை எனலாம்.

    என்னதான் போட்டி என்றாலும் இன்றும் டாப் சூப்பர் ஸ்டார்தான்

    என்னதான் போட்டி என்றாலும் இன்றும் டாப் சூப்பர் ஸ்டார்தான்

    விஜய் அஜித் தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களாக இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இன்றும் டாப்பராக இருக்கிறார். இந்த ஆண்டு தமிழ் திரையுலகில் நடிகர்களை தாண்டி இயக்குநர்களும் வேற்றுமொழி படங்களும் ஆதிக்கம் செலுத்தியதை காணமுடிந்தது. புஷ்பா, கேஜிஎஃப் 2 போன்ற படங்களும், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படமும் பெரிய ஹிட் அடித்தன. கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படமும் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் கொடுத்தது. இவர்கள் இடையே வழக்கம் போல் அஜித் விஜய் படங்களும் வசூலை வாரி குவித்தன.

    துணிவா? வாரிசா? சூடுபிடிக்கும் களம்

    துணிவா? வாரிசா? சூடுபிடிக்கும் களம்

    இந்நிலையில் அஜித் நடிக்கும் துணிவு படமும், விஜய்யின் வாரிசு படமும் 2023 பொங்கல் அன்று வர உள்ளது. இரண்டுப்படங்களுக்கும் போட்டி கடுமையாக இருக்கும் என தெரிகிறது. அஜித், விஜய் படங்கள் மோதல் என்பது இன்று நேற்றல்ல அது 20 ஆண்டுகளாகவே தொடர்கிறது. இதில் யார் படம் அதிக முறை வெற்றி பெற்றுள்ளது என்பதை பார்ப்போம். கிட்டத்தட்ட அஜித், விஜய் இருவரும் சம காலத்தில் திரைத்துறைக்கு வந்தார்கள். கமல் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த இவர்கள் இடையேயான போட்டி கடுமையாக உள்ளது. இதுவரை அஜித் விஜய் படங்களில் நேரடியாக மோதியதில் வெற்றிபெற்ற படங்களை பார்ப்போம்.

    இதுவரை நேரடியாக மோதிய அஜித்-விஜய் படங்கள்

    இதுவரை நேரடியாக மோதிய அஜித்-விஜய் படங்கள்

    அஜித் விஜய் படங்கள் கடந்த 25 ஆண்டுகளாக தனித்தனியாக வந்து பெருவெற்றியும், சில படங்கள் சுமாராகவும், சில படங்கள் தோல்வியையும் தழுவியுள்ளன ஆனாலும் இருவர் படங்களும் சுமார்13 முறைக்கு மேல் நேரடியாக மோதியுள்ளன. அதுபற்றி பார்ப்போம்.

    1996 ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் கோயம்பத்தூர் மாப்பிள்ளையும் அஜித்தின் 8வது படமான வான்மதியும் வெளியானது. வான்மதி ஹிட் அடித்தது.
    அதே 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விஜய்யின் பூவே உனக்காக படமும் அஜித்தின் கல்லூரி வாசல் படமும் வெளியானது. விக்ரமனின் வித்தியாசமான கதைக்களம் காரணமாக பூவே உனக்காக வெற்றி பெற்றது.

    1997 பொங்கல் அன்று அஜித் நடித்த நேசம், விஜய் நடித்த காலமெல்லாம் காத்திருப்பேன் வெளியானது. இதில் விஜய் படம் ஹிட் அடித்தது.
    1997 ஆண்டு டிசம்பரில் அஜித்தின் ரெட்டை ஜடை வயசு, விஜய் நடிப்பில் பாசில் இயக்கத்தில் காதலுக்கு மரியாதை வெளியானது. காதலுக்கு மரியாதை வித்தியாசமான காதல் கதை பெரு வெற்றி பெற்றது.
    1998 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் நினைத்தேன் வந்தாய் படமும் அஜித் கவுரவ வேடத்தில் நடித்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படமும் வந்தது. வித்தியாசமான கதை என்பதால் உன்னிடத்தில் என்னைகொடுத்தேன் ஹிட் அடித்தது.
    1999 ஆம் ஆண்டு விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படமும் அஜித்தின் தொடரும் படமும் 15 நாள் இடைவெளியில் வெளியானது. பாடல், காமெடி, வித்தியாசமான கதைக்களம் காரணமாக விஜய்க்கு இம்முறை வெற்றி கிடைத்தது.
    2000 ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய்யின் குஷி படமும், மே மாதத்தில் அஜித்தின் உன்னைத்கொடு என்னைத்தருவேன் படமும் வெளியானது. பாடல் நடனம் என அசத்திய குஷி படம் ஹிட் அடித்தது.
    2001 ஆம் ஆண்டு பொங்கல் அன்று அஜித்தின் தீனா, விஜய் சூர்யா நடித்த ஃபிரண்ட்ஸ் வெளியானது. பாடல், காமெடி காரணமாக ஃபிரண்ட்ஸ் ஹிட் அடித்தாலும் அஜித்தின் தினா பெரிதும் பேசப்பட்டது.
    2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் பகவதி படமும் அஜித் நடிப்பில் வில்லன் படமும் வெளியானது. அஜித்தின் வில்லன் பெரு வெற்றி பெற்றது.
    2003 ஆம் ஆண்டு விஜய் நடித்த திருமலை படமும் அஜித்தின் ஆஞ்சநேயா படமும் வெளியானது. இதில் ஆஞ்சநேயா பெரிய அளவில் ஓடவில்லை.
    2006 ஆம் ஆண்டு பொங்கல் அன்று விஜய் நடிப்பில் ஆதி படமும் அஜித் நடிப்பில் பரமசிவன் படமும் வெளியானது. இரண்டுமே பெரிதாக போகவில்லை
    2007 ஆம் ஆண்டு விஜய் நடித்த போக்கிரி அஜித் நடித்த ஆழ்வார் படமும் வெளியானது. இதில் ஆழ்வார் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

    7 ஆண்டுக்குப்பின் வீரம் ஜில்லா, 6 ஆண்டு கழித்து துணிவு, வாரிசு

    7 ஆண்டுக்குப்பின் வீரம் ஜில்லா, 6 ஆண்டு கழித்து துணிவு, வாரிசு

    அதன் பின்னர் அஜித் விஜய் படங்கள் 7 ஆண்டுகள் நேரடியாக மோதவில்லை நீண்ட இடைவெளிக்கு பின் 2014 விஜய்யின் ஜில்லா படமும் அஜித்தின் வீரம் படமும் நேரரடியாக மோதின இதில் வீரம் படம் ஹிட் அடித்தது. பெரும்பாலும் நேரடி மோதலில் விஜய் படமே வென்றுள்ளது. அதன் பின் மீண்டும் 6 ஆண்டுகளுக்கு பின் வரும் 2023 பொங்கல் தினத்தில் அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் நேரடியாக மோதுகிறது. இதில் அஜித்துக்கு பிளஸ் பாயிண்ட் ரெட் ஜெயண்ட் அஜித் படத்தை வெளியிடுவதுதான்.

    English summary
    Ajith and Vijay starrer Pongal release movies Thunivu and Varisu directly clash. So far, Ajith and Vijay films have directly clashed during Pongal, Diwali and Tamil New year day. Let's see whose film is the most successful. Although Ajith and Vijay are friendly, their fans clash with genial enmity like MGR-Nambiar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X