»   »  400 அடியில் போஸ்டர்: தல ரசிகர்களின் மங்காத்தா கொண்டாட்டம்

400 அடியில் போஸ்டர்: தல ரசிகர்களின் மங்காத்தா கொண்டாட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மங்காத்தா திரைப்படம் வெளிவந்து இன்று ஐந்து வருடம் ஆனதை அஜீத் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

மங்காத்தா வெளிவந்து இன்றுடன் 5 வருடங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் இதை இன்று தல ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மதுரையில், இதற்காக 400 அடியில் படத்தின் போஸ்ட்டரை ஒட்டி சாதனை படைத்துள்ளனர். இதுவரையில் எந்த படத்திற்கும் ரசிகர்களால் இந்த அளவிற்கு போஸ்டர் ஒட்டப்பட்டது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Thala Fans celebrate 5th year of Mankatha

இந்நிலையில் இன்று #5YearsOFMankatha என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.


அஜீத்தின் 50-வது படம் என்ற சிறப்பும், மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் வசூல் சாதனை படைத்தது என்பதோடு, இன்று வரை தல ரசிகர்கள் கொண்டாடப்படும் ஓர் படமாகவும் இருக்கின்றது.


Thala Fans celebrate 5th year of Mankatha

மங்காத்தாவில் அஜித்தை சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் மாஸாக ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் நடித்திருந்தார். யாரும் எதிர்பார்க்காத கிளைமேக்ஸ், நானும் எவ்ளோ நாளைக்கு தான் நல்லவனாவே நடிக்கிறது போன்ற வசனங்கள் அனைத்துமே படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.


இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் தீம் மியூசிக் இன்று வரை மாஸாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இன்று யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள் வாழ்த்தையும் தல ரசிகர்கள் மங்காத்தா கொண்டாட்டத்துடன் இணைத்துள்ளனர்.


Thala Fans celebrate 5th year of Mankatha

5 வருடங்கள் ஆனதை ஒட்டி இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் தல ரசிகர்கள் மங்காத்தா 2 இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர். அவரும் அஜீத் சம்மதித்தால், இயக்கலாம் என்று பதிலளித்து உள்ளார். சிறுத்தை சிவாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை கொடுக்கும் அஜீத் வெங்கட் பிரபுவுக்கும் அடுத்த வாய்ப்பினை கொடுப்பாரா என்று ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.

English summary
Ajith fans are celebrating 5 years of Mankatha, the blockbuster movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil