»   »  பொண்டாட்டி புள்ளைக்கு துணி எடுக்காமல் கருப்பு தினம்: தல ரசிகர்

பொண்டாட்டி புள்ளைக்கு துணி எடுக்காமல் கருப்பு தினம்: தல ரசிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் படம் ரிலீஸாகாததால் இந்த தீபாவளியை கொண்டாடப் போவது இல்லை என்றும், வீட்டில் கருப்புக் கொடி கட்டப்போவதாகவும் தல ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Thala fans not to celebrate Diwali

தீபாவளிக்கு அஜீத் படம் வரவில்லை. படம் இல்லாவிட்டாலும் டீஸர், ட்ரெய்லராவது வரும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அஜீத் ரசிகர் ஒருவர் தனது கவலையை தெரிவித்து பேசிய வீடியோ ட்விட்டரில் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,

இந்த வருஷம் எனக்கு தீபாவளியே கிடையாது. ஏனென்றால் தல படம் வரலை. இதுவரைக்கும் என் வாழ்க்கையில் நான் யாரையும் தல என சொன்னது இல்லை. தீபாவளின்னா புதுத் துணி போடுவதால் பட்டாசு வெடிப்பதால் இல்லை. தல படம் பார்ப்பது தான் கொண்டாட்டம்.

இது தலக்கு தெரியாதா? என் பொண்டாட்டி, பையனுக்கு துணி எடுக்கவில்லை, பட்டாசு வாங்கவில்லை. எங்க வேதனையை புரிந்து கொள்ளுங்க தல. இந்த தீபாவளி கருப்பு தினம். எங்கள் வீட்டில் கருப்புக் கொடியை கட்டி வைப்போம்.

இந்த வருஷம் மாதிரி அடுத்த வருஷமும் தப்பு பண்ணிடாதீங்க தல என்றார்.

English summary
Video of a Thala fan expressing his sadness as this Diwali is not going to be Thala Diwali is doing rounds on twitter.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil