»   »  என்னதான் அடிச்சிக்கிட்டாலும் 'பைரவா'வுக்கு பேனர் வைத்த தல ரசிகர்கள்

என்னதான் அடிச்சிக்கிட்டாலும் 'பைரவா'வுக்கு பேனர் வைத்த தல ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் பைரவா வெற்றி பெற வாழ்த்தி தல ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர்.

அஜீத்தும், விஜய்யும் அண்ணன் தம்பி போன்று பழகினாலும் அவரது ரசிகர்கள் எப்பொழுது பார்த்தாலும் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள். சண்டை போட்டு ஹேஷ்டேக்கை உலக அளவில் டிரெண்டாக்கிவிட்ட சாதனையாளர்கள் நம் தல, தளபதி ரசிகர்கள்.


Thala fans wish Bairavaa

அவர்களின் சண்டை ஹேஷ்டேக்கின் அர்த்தம் புரியாத வெளிநாட்டவர்கள் அதற்கு அர்த்தம் கேட்டு ட்வீட்டிய கொடுமை எல்லாம் நடந்துள்ளது. இப்படி அடித்துக் கொண்டிருப்பவர்கள் அவ்வப்போது பாசமும் காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைப்பார்கள்.


அப்படிப்பட்ட அரிய சம்பவம் நடந்துள்ளது. விஜய்யின் பைரவாவுக்கு தல ரசிகர்கள் மெகா பேனர் வைத்துள்ளனர். மேலும் ட்விட்டரிலும் பைரவாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


அந்த வாழ்த்து ட்வீட்,இன்று வெளியாகும் #பைரவா திரைப்படம் வெற்றிப்பெற " வீர சென்னை-The King Maker Thala Ajith Kumar Fans Club " சார்பில் வாழ்த்துகிறோம்!!👍


English summary
Ajith fans have displayed a banner for Vijay's Bairavaa apart from wishing the movie a great success.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil