ஓடுன ஒரே படம் மங்காத்தா... தீயாய் பற்றி எரியும் தல – தளபதி ரசிகர்கள் பஞ்சாயத்து

சென்னை : டாப் ஹீரோக்களாக இருக்கும் அஜித்தும், விஜய்யும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் தொடர்ந்து யார் பெஸ்ட் என மோதிக் கொள்வது வழக்கமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. சோஷியல் மீடியாவில் தல - தளபதி ரசிகர்களின் சண்டை முடிவில்லாமல் போய் கொண்டிருக்கிறது.

Thala -Thalapathy fans clash again in twitter

விஜய் பற்றி எந்த தகவல் வெளியானாலும் அதை வைத்து அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ஹாஷ்டேக் வெளியிட்டு, கிண்டல் செய்து டிரெண்டிங் ஆக்குவதும், அஜித் பற்றிய எந்த தகவல் வந்தாலும் அதை வைத்து விஜய் ரசிகர்கள் ஹாஷ்டேக் உருவாக்கி கலாய்ப்பது வழக்கமாகி வருகிறது. பொதுவாக தனது ஃபேவரைட் நடிகர்களின் பெயர்களின் தான் ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்டிங் ஆக்குவார்கள். ஆனால் தள-தளபதி ரசிகர்கள் தங்களுக்கு பிடிக்காத நடிகர் பெயரிலும் ஹாஷ்டேக் உருவாக்கி, டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

சமீபத்தில் அஜித் நடித்த வலிமை படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்ட போது, ட்விட்டரில் கத்தி என்ற ஹாஷ்டேக் திடீரென டிரெண்டிங் ஆனது. என்ன காரணம் என பார்த்தால், அஜித்தின் வலிமை மோஷன் போஸ்டரை விட விஜய் நடித்த கத்தி படத்தின் மோஷன் போஸ்டர் தான் பெஸ்ட் என காட்ட இந்த ஹாஷ்டேக்கை டிரெண்டிங் ஆக்கி உள்ளனர் விஜய் ரசிகர்கள்.

இதே போல் வலிமை படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான நாங்க வேற மாரி பாடல் வெளியிடப்பட்ட போதும், விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடலின் சாதனையை இது முறியடிக்க முடியவில்லை என கூறி கலாய்த்தனர். அதே போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

ஓடுன ஒரே படம் மங்காத்தா. எங்கேயோ தப்பு நடக்குது. அதை முதலில் கண்டுபிடியுங்கள் என தனது அடிப்பொடிகளுக்கு அஜித் உத்தரவிட்டுள்ளார் என பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியானதை போல், ஒரு பத்திரிக்கை ஃபோட்டோ சோஷியல் மீடியாவில் வெளியானது. உடனே விஜய் ரசிகர்கள், ஓடுன ஒரே படம் மங்காத்தா என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி, மீம்ஸ்கள் உருவாக்கி அஜித்தை கலாய்த்தனர்.

இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் பதிலுக்கு, ஓடுன ஒரே படம் துப்பாக்கி என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி, டிரெண்டிங் ஆக்கினர். விஜய்யையும், தற்போது நடந்து வரும் விஜய் - எஸ்.ஏ.சந்திரசேகர் இடையேயான விவகாரத்தையும் வைத்து விஜய்யை கண்ணா பின்னா என கலாய்த்து தள்ளினர். இப்படியே போனால் இதற்கு முடிவே இல்லையா என ட்விட்டர் பயனாளிகள் கேட்க துவங்கி உள்ளனர்.

இதற்கே இப்படி தல-தளபதி ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்க விடுகிறார். இந்நிலையில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படமும், அஜித் நடித்துள்ள வலிமை படமும் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு மோதிக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். அப்படி இரண்டு மெகா ஹீரோக்களின் படங்களும் ஒரே நாளில் ரிலீசானால் இன்னும் என்னவெல்லாம் செய்ய போகிறார்களோ அவர்களின் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X