»   »  'தல'யை அடுத்து தளபதி ரசிகர்களின் மனதை 'டச்' பண்ணிய ராகவா லாரன்ஸ்

'தல'யை அடுத்து தளபதி ரசிகர்களின் மனதை 'டச்' பண்ணிய ராகவா லாரன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் தனது படத்தின் தலைப்புகளை விஜய் மற்றும் அஜீத்துக்கு விட்டுக் கொடுத்த நல்ல சிவா ஆகியுள்ளார்.

இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தனது படம் ஒன்றுக்கு பைரவா என்ற தலைப்பை தேர்வு செய்து பதிவும் செய்துவிட்டார். இந்நிலையில் தான் பரதன் விஜய் 60 படத்திற்கு பல தலைப்புகளை தேடி பைரவாவை தேர்வு செய்தார்.

அப்பொழுது தான் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அந்த தலைப்பை முன்பதிவு செய்து வைத்தது தெரிய வந்தது.

பைரவா

பைரவா

விஜய் 60 படக்குழு ராகவா லாரன்ஸை அணுகி எங்கள் படத்திற்கு பைரவா என்ற தலைப்பு தான் மிகவும் பொருத்தமாக இருக்கும், அதை விட்டுக் கொடுக்க முடியுமா என்று கேட்டனர்.

ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

தன் படத்திற்கு என்று தேர்வு செய்த தலைப்பை விட்டுக் கொடுக்க ராகவா லாரன்ஸ் முதலில் தயங்கினார். பின்னர் தன் நண்பர் இளைய தளபதிக்காக பைரவா தலைப்பை விட்டுக் கொடுத்துவிட்டார்.

வேதாளம்

வேதாளம்

முன்னதாக ராகவா லாரன்ஸ் தனது படத்திற்காக தேர்வு செய்து வைத்திருந்த வேதாளம் தலைப்பை அஜீத்துக்காக பரிசாக அளித்து தல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத்

அஜீத்

அஜீத்தின் தல 57 படத்திற்கு வி(v) என்ற எழுத்தில் துவங்கும் தலைப்பை வைக்க உள்ளார்களாம். பார்த்து மீண்டும் லாரன்ஸ் தேர்வு செய்த ஏதாவது தலைப்பையே தேர்ந்தெடுத்து விட்டுக் கொடுக்கச் சொல்லப் போகிறார்கள்.

English summary
Raghava Lawrence is known for his generosity in real life. He is generous when it comes to gifting the movie titles to Thala and Thalapathy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil