»   »  தலைவா, கடவுளே ஆசிர்வதித்தது போல உள்ளது: ரஜினி பற்றி ராஜமவுலி

தலைவா, கடவுளே ஆசிர்வதித்தது போல உள்ளது: ரஜினி பற்றி ராஜமவுலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ரஜினிகாந்த் பாகுபலி 2 படத்தை பாராட்டியது கடவுளே வாழ்த்தியது போன்று உள்ளது என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் ராஜமவுலி.

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 படம் ஏற்கனவே வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்.

திரையுக பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் படக்குழுவை பாராட்டி வருகிறார்கள்.

ரஜினி

பாகுபலி 2 படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் கூறியிருந்ததாவது, பாகுபலி 2...இந்திய சினிமாவின் பெருமை. கடவுளின் குழந்தையான ராஜமவுலி மற்றும் அவரின் குழுவுக்கு சல்யூட்!!! மாஸ்டர்பீஸ் என தெரிவித்திருந்தார்.

ராஜமவுலி

ரஜினியின் ட்வீட்டை பார்த்த ராஜமவுலி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, தலைவா...கடவுளே ஆசிர்வதித்தது போன்று உள்ளது...எங்கள் குழு மகிழ்ச்சியில் உள்ளது..இதை விட வேறு எதுவும் பெரிது இல்லை என்றுள்ளார்.

தனுஷ்

ராஜமவுலி சார் எதுவும் சொல்வதற்கு இல்லை. மாஸ்டர்பீஸ் என்று தனுஷ் படத்தை பார்த்து ட்வீட்டியதற்கு நன்றி தனுஷ் என பதில் அளித்துள்ளார் ராஜமவுலி.

நன்றி

நன்றி

பாகுபலி 2 படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய அனைத்து பிரபலங்களுக்கும் தனித் தனியாக நன்றி தெரிவித்துள்ளார் ராஜமவுலி. பாகுபலி 2 படம் ஓடும் தியேட்டர்கள் எல்லாம் ஹவுஸ்ஃபுல்லாக உள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

English summary
Director Rajamouli has tweeted that, THALAIVAAAA... Feeling like god himself blessed us... our team is on cloud9... Anything couldn't be bigger... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. He tweeted after seeing Rajinikanth's tweet praising Baahubali 2 team.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos