Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அதென்ன Thalaivaa day?...நெட்டிசன்களை குழம்ப வைத்த விஜய் ஃபேன்ஸ்
சென்னை : முன்பெல்லாம் நடிகர்களின் பிறந்தநாள், பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால் தான் ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டிங் ஆக்குவார்கள். ஆனால் தற்போது தங்களின் ஃபேவரைட் ஸ்டார் பற்றிய ஒவ்வொரு விஷயத்தையும், ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள் ரசிகர்கள்.
தற்போதைய படங்கள் மட்டுமின்றி, பழைய படங்கள், அந்த ஸ்டார் திரையுலகிற்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்பதை கூட ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர்.
சமீப காலமாக அஜித், கமல், ரஜினி போன்ற பெரிய ஸ்டார்கள் பேசிய அல்லது பேட்டி அளித்த பழைய வீடியோக்கள் ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இதில் பல வீடியோக்கள் வைரலாகி, டிரெண்டாகி விடுகிறது.
நீண்ட
நாட்களுக்கு
பிறகு
மீண்டும்
சிரிப்பு..
கைகொடுத்த
தோழிகள்..
புகைப்படம்
பகிர்ந்த
மீனா!

டிரெண்டான தலைவா டே
அப்படி தான் இன்று காலை முதலே ட்விட்டரில் #ThalivaaDay என்ற ஹேஷ்டேக் செம டிரெண்டாகி வருகிறது. அதென்ன தலைவா டே என புரியாமல் முதலில் நெட்டிசன்கள் குழம்பிப் போயினர். பிறகு தான் தெரிந்தது விஜய் நடித்த தலைவா படம் ரிலீசான நாள் இன்று என்பதை தான் ரசிகர்கள் இப்படி கொண்டாடி வருகின்றனர் என்று.

இது தான் காரணமா
டைரக்டர் ஏஎல் விஜய் இயக்கத்தில், விஜய் நடித்து 2013 ம் ஆண்டு வெளிவந்த படம் தலைவா. ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்ட இந்த படம், முதலில் 2012 ம் ஆண்டு நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டு, பிறகு 2013 ம் ஆண்டு ஆகஸ்ட் 8 ம் தேதி மும்பையில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழகத்தில் மட்டும் லேட்
ஆனால் அரசியல் காரணங்களால் ஏற்பட்ட எதிர்ப்பால் தமிழகத்தில் ஆகஸ்ட் 20 ம் தேதி தான் ரிலீஸ் செய்யப்பட்டது. 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்றது. முதல் வாரத்திலேயே சிங்கம் 2 படத்தின் வசூலை தலைவா முறியடித்தது.

அதிக எதிர்ப்பை சந்தித்த படம்
விஜய், அமலாபால், நிரவ்ஷா, சந்தானம், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். அவரது இசையில் 6 பாடல்கள், ஒரு தீம் மியூசிக் உருவாக்கப்பட்டிருந்தது. விஜய்யின் படங்களிலேயே அதிக எதிர்ப்பை சந்தித்த படம் இது தான். படத்தின் டைட்டிலை வெளியிட்டதுமே எதிர்ப்பு ஆரம்பமானது.

இது வேற பண்ண போறாங்களா
தலைவா படம் ரிலீஸ் செய்யப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி உள்ளனர். ஹேஷ்டேக் மட்டுமல்ல தலைவா டே விற்காக காமன் டிபி ஒன்றையும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இன்று மாலை டைரக்டர் ஏஎல் விஜய், தலைவா டே காமன் டிபி.,யை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது. தலைவா டேவை முன்னிட்டு ஃபேன் மேட் போஸ்டர்கள் அதிக அளவில் ட்விட்டரில் பகிரப்பட்டு வருகின்றன.