For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சினிமாவை தாண்டி, யானை மரணம், ஜார்ஜ் பிளாய்டு என ஒலித்த ’தலைவன் இருக்கின்றான்’ லைவ்!

  |

  சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து கலந்துரையாடிய 'தலைவன் இருக்கின்றான்' லைவ்வில் பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளன.

  அமைதியாக ஏ.ஆர். ரஹ்மானும், ஆர்வத்துடன் கமலும் பேசிய ஒரு மணி நேர லைவ் நிகழ்ச்சி, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்குமான விருந்தாகவே இருந்தது.

  சினிமாவை தாண்டி, யானை மரணம், ஜார்ஜ் பிளாய்டு கொலை போன்ற விஷயங்களும் இந்த லைவ் நிகழ்ச்சியில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  சக்ஸஸ்.. லாக்டவுனில் கணவருக்கு முடி வெட்டிவிட்ட பிரபல நடிகை.. பாராட்டி தள்ளிய பிரபல ஹீரோ!சக்ஸஸ்.. லாக்டவுனில் கணவருக்கு முடி வெட்டிவிட்ட பிரபல நடிகை.. பாராட்டி தள்ளிய பிரபல ஹீரோ!

  பாடவில்லை

  பாடவில்லை

  விஜய்சேதுபதி, கமல் லைவ் நிகழ்ச்சியை தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு கமல், ரஹ்மான் லைவ் என்றதும் ஒரே பாட்டுக் கச்சேரியாக இருக்கும்பா என கணித்த நிலையில், கடைசி வரை இருவரையும் பாடல் ஏதும் பாடும்படி ரெக்வஸ்ட் வைக்காமல், நிகழ்ச்சியை நினைவுகளுடனும் எதிர்கால கனவுகளுடனும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

  இவரை கண்டுக்கவே இல்லை

  இவரை கண்டுக்கவே இல்லை

  ஏ.ஆர். ரஹ்மானுடன் அதிக படங்களில் பணிபுரியாதது குறித்து பேசிய கமல், இளையராஜாவை விட்டு தன்னால் வெளியே வரமுடியவில்லை என்றும், ஏ.ஆர். ரஹ்மான் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, அவரை தான் கண்டுக்கொள்ளாமல் மிகுந்த கர்வத்துடன் இருந்ததாகவும், பின்னர், பலரையும் தனது இசையால் நொறுக்கியது போல என்னையும் அவர் வசம் ஈர்த்தார் என கமல் ரஹ்மானை பாராட்டினார்.

  கமல் ரசிகன்

  கமல் ரசிகன்

  கமல் படங்களை பார்த்தும், அவருடன் பழகியும் பல விசயங்களை தான் கற்றுக் கொண்டேன் என்றும், அவர் ஒரு என்சைக்ளோபீடியா, அவர் ஒரு யூனிவர்சிட்டி, தான் கமலின் தீவிர ரசிகன் என்றும், பல விசயங்களை தமிழ் சினிமாவில் செய்த முன்னோடி கமல் என்றும் ஏ.ஆர். ரஹ்மான் கமல் மீதான தனது கருத்துக்களை அழகாகவும் அமைதியாகவும் எடுத்துரைத்தார்.

  நல்லா இல்லைன்னு சொல்லிட்டேன்

  நல்லா இல்லைன்னு சொல்லிட்டேன்

  ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் படத்தில் முதன்முறையாக ஏ.ஆர். ரஹ்மானுடன் பணிபுரியும் போது, அந்த படத்திற்காக அவர் இசையமைத்த "கப்பலேறி போயாச்சு" பாடல் தனக்கு பிடிக்கவில்லை, பரவாயில்லை வைத்துக் கொள்ளுங்கள் என ஷங்கரிடம் கூறியதாகவும், பின்னர், பாடல் படமாக்கப்பட்ட பின்னர், தான் ரஹ்மானின் மேஜிக்கை அறிந்து கொண்டேன் என கமல் ஏ.ஆர். ரஹ்மான் பற்றி தான் நினைத்திருந்த மாய பிம்பத்தை வெளிப்படையாக போட்டுடைத்தார்.

  யானைக்கு அன்னாசி

  யானைக்கு அன்னாசி

  கலைஞர்கள் செல்லப் பிராணிகள் அல்ல, அவர்கள் காட்டு மிருகங்களை போல, சுதந்திரமாக உலாவ விட வேண்டும், யானைக்கு அன்னாசி கொடுத்தது போல கொடுத்து கொன்று விடக் கூடாது என்று கூறிய கமல், தமிழ் தாய் வாழ்த்து பாடலை ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என ஓராண்டுக்கு முன்னதாகவே அவரிடம் வைத்த கோரிக்கையை நினைவு படுத்தினார்.

  ஜார்ஜ் பிளாய்டு

  ஜார்ஜ் பிளாய்டு

  ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கடவுள் என மனிதர்கள் குறுகிய வட்டத்துக்குள் அடைபட்டுக் கிடப்பதன் விளைவுதான், 300 ஆண்டுகள் ஆகியும் அமெரிக்கா அறிவால், ஆற்றலால் வளர்ந்த நாடாக திகழ்ந்தாலும், இன்னமும் கருப்பினர்களுக்கு எதிரான அணுகுமுறை மாறவில்லை என்றும், சமீபத்தில் கொடூரமாக ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டது ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியது என்றும் ரஹ்மான் கூறினார்.

  முரண்

  முரண்

  ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த உரையாடலில் கமலுக்கும், ரஹ்மானுக்கும் பல்வேறு முரண்கள் சின்ன சின்னதாக அவ்வப்போது தலை காட்டினாலும், பெண்கள் விசயத்தில், ரஹ்மான் இருவரும் சரி சமம் எனக் கூற, இல்லை ஆண்களாலும், பெண்களாலும் எல்லா விசயங்களையும் செய்ய முடியும், ஆனால் பிள்ளையை பெற்றெடுக்கும் விசயத்தை பெண்கள் மட்டுமே செய்ய முடியும் என தனது கருத்தை கமல் பதிவு செய்தார்.

  மீண்டும் இணைந்து

  மீண்டும் இணைந்து

  இந்தியன், தெனாலி படங்களுக்கு பிறகு கமல்ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான் மீண்டும் இணைந்து இசையமைக்கப் போகும் படம் தான் தலைவன் இருக்கின்றான். தேவர்மகன் 2ம் பாகமாக உருவாகவுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி முக்கிய ரோலில் நடிக்கிறார். தலைவன் இருக்கின்றான் படத்தின் அறிவிப்பை தொடர்ந்து, இந்த லாக்டவுனில் இன்ஸ்டாகிராம், டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் லைவ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

  English summary
  Kamal Haasan and AR Rahman live show Thalaivan Irukkindran finished now. Both the legends shared more than cinema and spoke about world knowledge.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X