»   »  டான்ஸ், ஃபைட் இல்லாத ’தலைவன் இருக்கிறான்’?

டான்ஸ், ஃபைட் இல்லாத ’தலைவன் இருக்கிறான்’?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமலின் விஸ்வரூபம் வந்து 4 ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னும் விஸ்வரூபம் 2 வருவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. ஏகப்பட்ட சிக்கல்களைச் சந்தித்த சபாஷ் நாயுடு எப்போது மீண்டும் துவங்கும் என்று தெரியவில்லை. நேற்று பிக் பாஸிலேயே எனக்கும் படம் வந்து 2 ஆண்டுகள் ஆச்சு என்று பிந்து மாதவியிடம் வருத்தப்பட்டார் கமல்.

ஆனால் விரைவிலேயே தலைவன் இருக்கிறான் படத்தை தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. காலில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் கமலால் சண்டைக் காட்சியிலோ நடனக் காட்சியிலோ நடிப்பது சிரமமாம். எனவேதான் சபாஷ் நாயுடு தொடங்க தாமதம் ஆகிறது.

Thalaivan Irukkiran without dance and fights

எனில் இப்போது தொடங்கவிருக்கும் தலைவன் இருக்கிறான்?

இந்த படத்தின் ஸ்க்ரிப்டில் சண்டையோ டான்ஸோ இல்லாத மாதிரி பார்த்து எழுதியிருக்கிறாராம். எனவே சபாஷ் நாயுடுவை முடிப்பதற்கு முன்பே தலைவன் இருக்கிறான் படத்தை தொடங்கவிருக்கிறார் கமல் என்கிறார்கள்.

English summary
Due to recent surgery Kamal is planning to take Thalauivan Irukkiran movie without fight and dances.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil