தலைவர் 169 கொல மாஸ் அப்டேட்... செம காம்போவா இருக்கே...ஆச்சரியத்தில் திரையுலகம்

சென்னை : ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை தயாரிக்க போவது யார், இயக்க போவது யார் என்பது பற்றிய செம மாஸான அப்டேட் வெளியாகி உள்ளது. இதை கேட்டு இந்திய சினிமாவே ஆச்சரியப்பட்டு போய் உள்ளது.

அண்ணாத்த படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை இயக்க போவது யார் என்ற கேள்வி கோலிவுட்டில் பல நாட்களாக நிலவி வருகிறது. இதற்கு நெல்சன் திலீப்குமார், தேசிங்கு பெரியசாமி உள்ளிட்ட பல டைரக்டர்களின் பெயர்கள் அடிபட்டது. ஆனால் அவர்கள் தலைவர் 169 படத்தை இயக்க போவது இவர்கள் யாரும் இல்லையாம்.

வேற லெவல் டீம் ரெடி

வேற லெவல் டீம் ரெடி

கோலிவுட்டின் பல டாப் டைரக்டர்களிடம் ரஜினி கதை கேட்டு வருவதாகவும், ஹீரோயின் உள்ளிட்ட தேர்வுகளும் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. அண்ணாத்த படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவே ரஜினியின் அடுத்த படத்தையும் இயக்க போவதாகவும் தகவல் பரவியது. ஆனால் இவை எதுவும் உண்மை இல்லையாம். ரகசியமாக வேற லெவல் மாஸாக தலைவர் 169 படத்திற்கான டீம் தயாராகி வருகிறதாம்.

இளையராஜா பற்றி தெரியாத விஷயம்

இளையராஜா பற்றி தெரியாத விஷயம்

இசைஞானி இளையராஜா ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி உள்ளார். அவரது ரசிகர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். பல எவர்கிரீன் பாடல்களை இசையமைத்தும், எழுதியும், பாடியும் உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் அவர் சில சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தும் உள்ளார் என்பது தற்போதைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மீண்டும் தயாரிப்பில் இளையராஜா

மீண்டும் தயாரிப்பில் இளையராஜா

தனது பாவலர் கிரியேஷன்ஸ் பேனரில் ரஜினியின் ராஜாதி ராஜா, கமலின் சிங்கார வேலன் போன்ற படங்களை தயாரித்தவர் இளையராஜா தான். பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தயாரிப்பிற்கு திரும்ப இளையராஜா முடிவு செய்திருப்பதாகவும், அதுவும் டாப் ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய் படங்களை தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் ஏற்கனவே நடத்தப்பட்டு வந்தது.

 தலைவர் 169 செம அப்டேட்

தலைவர் 169 செம அப்டேட்

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை இளையராஜா தயாரிக்க போவது கிட்டதட்ட முடிவாகி விட்டதாம். இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை முடிந்து, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இந்த படத்தை இயக்க போவது கோலிவுட் டைரக்டர்கள் கிடையாதாம். பாலிவுட்டில் அக்ஷய் குமாரின் Padman, தனுஷின் Shamitabh, அமிதாப் பச்சனின் Paa படங்களை இயக்கிய டைரக்டர் பால்கி தான் அடுத்தபடியாக சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்க போகிறாராம். இந்த படம் இந்தியாவின் பல மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளதாம். மிக விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட உள்ளதாம்.

ஒரே நேரத்தில் இத்தனை அப்டேட்டா

ஒரே நேரத்தில் இத்தனை அப்டேட்டா

தயாரிப்பு மட்டுமல்ல இந்த படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்கவும் போகிறாராம். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யப் போகிறவர் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி. ஸ்ரீராம் தானாம். தலைவர் 169 படத்தின் கதை முதலில் அமிதாப் பச்சனுக்காக தான் எழுதப்பட்டதாம். ஆனால் திரைக்கதை முடிவடையும் சமயத்தில் இதில் ரஜினிகாந்த் நடித்தால் எப்படி இருக்கும் என யோசித்து தான் ரஜினியிடம் பேசினார்களாம். கதையை கேட்டதும், அதுவும் இளையராஜா தயாரிக்கும் படம் என்பதால் உடனே ரஜினி ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X