»   »  விஜய் 60... "விநாயகம்" இல்லையாம்.. 'பைரவா' தானாம்.. விஜயே சொல்லிட்டாரு!# Bairavaa #vijay60title

விஜய் 60... "விநாயகம்" இல்லையாம்.. 'பைரவா' தானாம்.. விஜயே சொல்லிட்டாரு!# Bairavaa #vijay60title

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு 'பைரவா' தான் என நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

விஜய்யின் 60வது படமாக உருவாகி வருகிறது பரதன் இயக்கி வரும் புதிய படம். இப்படத்தில் விஜய்யின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக இன்று பைரவா என அறிவிக்கப்பட்டுள்ளது.

வதந்திகள்...

வதந்திகள்...

முன்னதாக நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே, இது தான் விஜய் 60 படத்தலைப்பு என பல யூகங்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கின.

விநாயகம்...

விநாயகம்...

இன்று காலை வரை இப்படத்தின் தலைப்பு விநாயகம் என இணையத்தில் ஒரு தகவல் பரவியது. அதற்கும் முன்னர் எம்.ஜி.ஆர். படத்தலைப்பான ‘எங்க வீட்டு பிள்ளை' தான் விஜய் படத்தலைப்பு எனக் கூறப்பட்டு வந்தது.

காரணம்...

காரணம்...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் டைட்டில் என்பதால், விநாயகம் தான் விஜய் படத்தலைப்பு என்று முடிவு செய்தார்களா நெட்டிசன்கள் எனத் தெரியவில்லை. ஆனால், இந்தத் தலைப்பில் மற்றொரு சுவாரஸ்யமும் அடங்கியுள்ளது.

மாறி.. மாறி...

மாறி.. மாறி...

அதாவது சமீபகாலமாக அஜித்தும், விஜய்யும் மாறி மாறி தங்களது படப்பெயர்களை ஒருவர் படத்துடன் ஒருவர் தொடர்பு படுத்தி வருகின்றனர். அதாவது புலி படத்தில் விஜய் வேதாளமாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து வெளிவந்த அஜித்தின் படத்தலைப்பு வேதாளம்.

தெறி...

தெறி...

இதேபோல், வேதாளம் படத்தில் அஜித் கூறும் பிரபல வசனம் ‘தெறிக்க விடலாமா'. அதனைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படத்திற்கு ‘தெறி' எனப் பெயரிடப்பட்டது.

விநாயகம்...

விநாயகம்...

அந்தவரிசையில் தற்போது விஜய்யின் புதிய படத்திற்கு வீரம் படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயரான விநாயகம் என்பதை வைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது. வேதாளம் படத்தில் அஜித்தின் பெயர் கணேஷ். இதுவும் பிள்ளையாரின் மற்றொரு பெயர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 உண்மையா.. பொய்யா..?

உண்மையா.. பொய்யா..?

இது ஒருபுறம் இருக்க, தற்போது அலங்கரிக்கப்பட்ட ரிக்‌ஷா ஒன்றில் விஜய் ஒய்யாரமாய் அமர்ந்திருக்க ‘பைரவா' என்ற டைட்டிலும் புதிய போஸ்டர் ஒன்று இன்று இணையத்தில் வெளியானது. நாளை ரிலீசாக இருந்த போஸ்டர் லீக்காகி விட்டதாகக் கூறப்பட்டது.

உறுதி செய்த விஜய்...

இதனால் விஜய் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். விஜய் 60 படத்தலைப்பு என்ன என்ற ஆர்வம் அவர்களிடையே அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது புதிய படத்தின் தலைப்பு பைரவா தான் என்பதை உறுதி செய்துள்ளார். கூடவே, அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார்.

    English summary
    'Vijay 60' has a single word title 'Bairavaa' officially announced with the first look poster several hours before the scheduled time.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil