twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கைதி படத்தை தளபதி விஜய் பார்த்து விட்டாரா? - லோகேஷ் கனகராஜ் பதில்

    |

    Recommended Video

    Thalapathy 64 | Lokesh Kanagaraj Press Meet | Kaithi

    சென்னை: லோகேஷ் கனகராஜ் விஜய்யை இயக்கப்போகும் தளபதி 64 திரைப்படத்தை இயக்குவதற்கான பணியை தொடங்கிவிட்டார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கவுள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தை 2020ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கைதி நேற்று வெளியாகி எதிர்பார்ப்புக்கும் மேலாக, சக்கை போடு போட்டு வருகிறது. ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களால் கைதி படக்குழுவினர் ஆனந்தத்தில் மிதக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படம் நிச்சயம் ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமையும் என்பது ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினரின் எதிர்பார்ப்பு.

    Thalapathy 64 Update-Lokesh Kanagaraj started work.

    மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் இன்று கைதி திரைப்படம் மூலம் தன்னை ஒரு முன்னணி மற்றும் யாராலும் அசைக்க கூட முடியாத ஒரு மாபெரும் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கிய இரண்டு படங்களுமே இரவில் எடுத்திருப்பதால் அவரை ஒரு இரவு பிரியர் என்று நினைக்க வேண்டாம். இதற்கு அவர் பதில் அளிக்கையில் அப்படத்திற்கு அது தேவைப்பட்டதால் இரவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

    இதுதான் ரியல் கெத்து.. ஃபேஸ்புக் லைவ்வில் வருகிறார் கார்த்தி!இதுதான் ரியல் கெத்து.. ஃபேஸ்புக் லைவ்வில் வருகிறார் கார்த்தி!

    இப்படத்திற்கு நடிகர் கார்த்தியின் அர்ப்பணிப்பு என்பது மிகவும் அற்புதமானது. மிகவும் தைரியமாக ஒரு முழு நீள ஹீரோ சப்ஜெக்ட்டில் ஹீரோயின், பாடல், காமெடி இப்படி எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லை என்றாலும் படத்தை சுவாரசியமாக நகர்த்தியுள்ளார் இயக்குனர். அதற்கு படத்தின் கதாநாயகனும் ஒத்துழைத்ததே மிக பெரிய பலம்.

    Thalapathy 64 Update-Lokesh Kanagaraj started work.

    படத்தை எடுத்ததில் மட்டும் துணிச்சல் காட்டாமல் படத்தை நேற்று வெளியிட்டதிலும் தன்னுடைய துணிச்சலை நிரூபித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். பிகில் திரைப்படத்தோடு போட்டியிட்டு கைதி திரைப்படமும் நேற்று வெளியானது தான் மாஸ்.

    கமல்ஹாசன் நடித்த விருமாண்டி மற்றும் ஹாலிவுட் திரைப்படமான டை ஹார்ட் திரைப்படமும் எனக்கு ஒரு தூண்டுதலாக இருந்தது. தவிர அவற்றின் தாக்கம் அல்ல என்று விளக்கினார் இயக்குநர்.

    கைதி படம் நிறைவடையும் முன்னரே, அவர் தனது அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கிவிட்டார். ஆனால், அது குறித்த தகவல்களை கூடிய விரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனால் சினிமா பற்றிய தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் கேள்விப்பட்ட தகவல் என்னவெனில், விஜய் நடிக்கும் தளபதி 64 என்று பெயரிடப்பட்ட படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது.

    இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கவுள்ளார். மேலும், இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்யவும் தயாரிப்பு நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

    இளைய தளபதி விஜய் கைதி படத்தை பார்த்துவிட்டாரா என்று கேட்டதற்கு அவர் பிஸியாக இருக்கும் காரணத்தால் இதுவரையில் கைதி திரைப்படத்தை பார்க்கவில்லை. ஆனால் விரைவில் அவருக்கு படம் காண்பிக்கப்படும் என்றார், கைதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ். எனவே கூடிய விரைவில் இயக்குநரின் அடுத்த மாஸ் படத்திற்காக ரெடியாவோம்.

    English summary
    Cinema circles have reported that Lokesh Kanagaraj has started work on Vijay's 'Thalapathy 64 movie. It is already reported that Vijay will act as a college professor. It is also scheduled to release in the summer of 2020.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X