தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி...மாஸ் வீடியோவுடன் வெளியீடு

சென்னை : மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் தளபதி 65. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் முடித்து விட்டு திரும்பி உள்ள படக்குழு, சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டது. இதற்காக ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்ற பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வந்தது.

விஜய் பிறந்தநாள் அறிவிப்பு

விஜய் பிறந்தநாள் அறிவிப்பு

ஆனால் அதற்குள் கொரோனா இரண்டாம் அலை, லாக்டவுன் துவங்கியதால், படத்தின் வேலைகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த வாரம் தளபதி 65 தொடர்பாக மிகப் பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு

ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு

அதே போன்று தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியிடப்படும் என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ். அந்த வீடியோவில் ஃபர்ஸ்ட் லுக் ஜுன் 21 ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

இந்த தகவல் நிஜமாகவே விஜய் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

ஜுலையில் படப்பிடிப்பு

ஜுலையில் படப்பிடிப்பு

தளபதி 65 படத்தின் மூலம் பூஜா ஹெக்டே கோலிவுட்டில் அடியெடுத்து வைக்க உள்ளார். மலையாள நடிகை அபர்ணா தாஸ், ஷைன் டாம் சாகோ, யோகிபாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். அரசு அனுமதி அளித்ததும் ஜுலை அல்லது ஆகஸ்ட்டில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்புக்கள் மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X