For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தளபதி 66 ,டிரைவர் ஜமுனா, தில் ராஜு... இது தான் நெக்ஸ்ட் திட்டமா ?

  |

  சென்னை : தொடர்ந்து பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

  தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து நல்ல நடிகை என பெயர் வாங்கியவர்.

  தற்போது பல படங்களில் நடித்து வரும் அவர் டிரைவராக நடிக்கும் படம் டிரைவர் ஜமுனா. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நாளிலிருந்து இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடிக் கொண்டு வருகிறது.

  தளபதி 66 படத்தில் யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா...முழு விபரம் இதோ தளபதி 66 படத்தில் யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா...முழு விபரம் இதோ

  கதாநாயகி அல்ல கதையின் நாயகி

  கதாநாயகி அல்ல கதையின் நாயகி

  கதாநாயகர்களுக்கு ஜோடியாக வந்து நான்கு பாடல்களில் அவர்களுக்கு இணையாக நடனமாடி செல்லும் பல ஹீரோயின்கள் மத்தியில் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகை ஐஸ்வர்யா. வளர்ந்துவரும் காலகட்டத்திலேயே இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடித்தவர். இவர் இயக்குனர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்தில், குடிசையில் வாழும் ஒரு ஏழை பெண்ணாக இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக மேக்கப் இல்லாமல் நடித்து இருப்பார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகள் பல இவரை தேடி வருகிறது. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தனக்கென்று பல ரசிகர்களை வைத்துள்ளார்.

  ரஜினியை தொடர்ந்து

  ரஜினியை தொடர்ந்து

  சிவகார்த்திகேயன் தயாரித்து அருண்ராஜா காமராஜ் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் கதாநாயகியாக நடித்து இருப்பார். பெண் கிரிக்கெட்டர் கதாபாத்திரத்தை ஏற்று, அதை கச்சிதமாக செய்து, மக்களின் பாராட்டுகளைப் பெற்றார். கனா படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்பு பல மாதமாக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு, ஒரு கிரிக்கெட்டரின் உடல் மொழியை கற்றுக் கொண்டு படத்தில் நடித்திருப்பார். தென்னிந்தியாவில் எந்த ஒரு கதாநாயகியும் ஏற்காத கதாபாத்திரமாக அது இருந்தது. இந்த படம் கடந்த வருடம் சீனாவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. அமீர்கான் நடித்த Dangal ரஜினி நடித்த 2.O படங்களுக்கு பிறகு சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்ட படமாக இது சொல்லப்படுகிறது.

  Recommended Video

  முழுக்க முழுக்க CAR ஐ மையப்படுத்திய படம் | Actress Aishwarya Rajesh Exclusive | Filmibeat Tamil
  தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரியின் இரண்டாவது படம்

  தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரியின் இரண்டாவது படம்

  18 Reels பேனர் தயாரிப்பாளர் எஸ் பி சவுத்ரி தயாரிக்கும் முக்கியமான படம் டிரைவர் ஜமுனா. இவர் இதற்க்கு முன் தயாரித்த படம் டக்கால்டி மற்றும் அதன் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றது . இதில் சந்தானம் கதாநாயகனாக நடித்து இருப்பார். அதனை அடுத்து 18 Reels பேனர் தயாரிக்கும் டிரைவர் ஜமுனா வில் Cab ஓட்டும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பல பெண் டிரைவர்கள் உடன் பேசி அவர்களின் உடல் மொழியை கற்றுக் கொண்டு இதில் நடித்திருக்கிறார். முழுநீள Road Action Movie ஆக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் கிரீன் மேட் இல்லாமல் அவரே செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இதனால் மெயின் ரோட்டில் வேகமாக கார் ஓட்டும் பயிற்சி எடுத்துக்கொண்டார் என சொல்லப்படுகிறது. தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை மேலோட்டமாக இல்லாமல் அதற்குள் சென்று, டீடைலாக புரிந்துகொண்டு நடிப்பதில் முதன்மையாக திகழ்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். Cab ஓட்டுனரான ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு ஏற்படும் ஒரு பிரச்சினையை எப்படி சமாளித்து வெளியே வந்தார் என்பதே கதையாக இருக்கும் என யூகிக்கப்படுகிறது.

  தளபதி 66 தயாரிப்பாளர் வெளியிட்ட பஸ்ட் லுக்

  தளபதி 66 தயாரிப்பாளர் வெளியிட்ட பஸ்ட் லுக்

  டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் தில் ராஜு. தெலுங்கில் பிரம்மாண்ட தயாரிப்பாளரான இவர் தற்போது விஜய் நடிக்கும் 66வது திரைப்படத்தை தயாரிக்கிறார். இவர் படங்களை தயாரிப்பதோடு சில தரமான படங்களை வாங்கி விநியோகம் செய்து வருகிறார். அந்த வகையில் டிரைவர் ஜமுனா திரைப்படத்தை தெலுங்கு உரிமையை வாங்கும் எண்ணத்தில் தில் ராஜு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. அதற்கு காரணம் ஆகவே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டார் என சொல்லப்படுகிறது. இவரோடு நடிகரும் இசையமைப்பாளருமான சூரி ராவ், stand-up காமடியன் அபிஷேக் குமார் மற்றும் ஸ்ரியா ரெட்டி, சுருதிஹாசன், அஞ்சு குரியன் போன்ற பலர் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனால் டிரைவர் ஜமுனா திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தில் ராஜு பல தமிழ் படங்கள் மீது வியாபார ரீதியாக அலசி வருகிறார். நல்ல கதை அம்சம் உள்ள படங்களை செலக்ட் செய்து அந்த படங்களுக்கு தெலுங்கு உரிமை மற்றும் அதன் வர்த்தகம் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் என்று பெரிதும் கூறப்பட்டு வருகிறது. தளபதி 66 படத்தை தொடர்ந்து அஜித் படம், ரஜினி படம் என்று பல திட்டங்களை இவர் தீட்டி உள்ளார் என்று தெலுங்கு மீடியா வட்டாரங்கள் கூறுகின்றன.

  English summary
  Thalapathy 66, Driver Jamuna and Dhill Raju is the Next Plan for Aishwariya Rajesh
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X