தளபதி 66 லேட்டஸ்ட் அப்டேட் இது தானா... செம அசத்தலா இருக்கே
சென்னை : விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 66 படத்தின் அடுத்த அப்டேட் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் தளபதி 66 பற்றி தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிக்கும் தளபதி 66 படத்தின் பூஜை ஏப்ரல் 6 ம் தேதி நடத்தப்பட்டு, இதைத் தொடர்ந்து சென்னையில் முதல் கட்டமாக சில நாட்கள் மட்டும் ஷுட்டிங் நடத்தப்பட்டது. இதற்கு பிறகு பிரேக் விட்டுள்ளார்கள்.

அடுத்த ஷுட்டிங் எப்போ
இதனால் இரண்டாம் கட்ட ஷுட்டிங் எப்போது துவங்குவார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர். இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக மே 3 ம் தேதி ஐதராபாத்தில் தளபதி 66 படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம். இதற்காக ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளதாம். மே 3ம் தேதி துவங்கி கிட்டதட்ட ஒரு மாதம் வரை ஐதராபாத்தில் ஷுட்டிங் தொடர்ந்து நடக்கும் என கூறப்படுகிறது.

தளபதி 66 பற்றி பேசவே பயமா இருக்கு
சமீபத்தில் ஆஹா தமிழ் தளத்தில் பிராண்ட் அம்பாசிடர்களாக சிம்பு மற்றும் அனிருத்தை அறிவிப்பதற்காக நடத்தப்பட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய டைரக்டர் வம்சி, தளபதி 66 படம் பற்றி பேசவே பயமாக இருக்கிறது. ஆனால் படம் நிச்சயமாக ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும் என உறுதியளித்தார். வம்சி கொடுத்த வாக்குறுதி மட்டுமல்ல, பீஸ்ட் படத்திற்கு கிடைத்த நெகடிவ் விமர்சனங்களால் தளபதி 66 படக்குழுவினர் ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்து வருகிறார்களாம்.

அட இது செம மேட்டரா இருக்கே
தளபதி 66 படத்தை எப்படியும் மாஸ் ஹிட்டாக்கியே தீர வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்களாம். இதனால் தான் தமான் இசையமைக்கும் போது தானும் இரவு பகலாக அவருடனேயே இருந்து கவனித்து வருகிறாராம் தயாரிப்பாளர் தில் ராஜு. படத்திற்கு மேலும் வெயிட் ஏற்ற, படத்தில் விஜய்யை ஒரு பாடல் பாட வைத்துள்ளனராம். முதல் கட்ட ஷுட்டிங் முடிந்த உடனேயே விஜய்யை வைத்து முதல் பாட்டை ரெக்கார்டிங் செய்து விட்டார்களாம். அனேகமாக இந்த பாடல் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

மாஸ் ஹிட் பாட்டு ரெடி
வழக்கமாக விஜய் தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடல் பாடி விடுவார். ஆனால் சச்சின் படத்திற்கு பிறகு இதனை நிறுத்தி விட்டார். பிறகு துப்பாக்கி படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தான் விஜய்யிடம் பேசி சம்மதிக்க வைத்து, கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன் பாடலை பாட வைத்துள்ளார். அதற்கு பிறகு வருடத்திற்கு ஒரு பாட்டாவது பாடி வருகிறார் விஜய். அப்படி விஜய் பாடிய பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டாகி விடும்.
Recommended Video

தெலுங்கு பாடல் எப்படி இருக்கும்
மாஸ்டரில் குட்டி ஸ்டோரி, பீஸ்ட் படத்தில் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ஹிட் ஆகி உள்ளன. இதனால் தளபதி 66 படத்திலும் விஜய்யை ஒரு பாடல் பாட வைத்துள்ளனராம். தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்படுவதால் தெலுங்கிலும் விஜய் தான் இந்த பாடலை பாடி உள்ளாராம், விஜய் பாடிய தெலுங்கு பாடல் எப்படி இருக்கும் என கேட்க ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











