ஆஹா வேற லெவல் அப்டேட்டா இருக்கே...செம மாஸ் கூட்டணியில் தளபதி 66 லோடிங்
சென்னை : தளபதி 66 பற்றிய மாஸாக மற்றொரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதை கேள்விப்பட்டதுமே படம் என்ன ரேஞ்சில் இருக்கும் என்பதை யோசித்து விஜய் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் கிட்டதட்ட முடியும் நிலையில் உள்ளது. இதனால் படத்தை ஏப்ரல் 14 ல் ரிலீஸ் செய்யலாமா என சன் பிக்சர்ஸ் யோசித்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லே, அபர்னாதாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க உள்ள தளபதி 66 படம் பற்றிய அப்டேட்களும் வெளிவர துவங்கி விட்டன. தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் இயக்கப்பட உள்ள இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு தமான் இசையமைக்கிறார்.

தளபதி 66 ஹீரோயின் இவரா
தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனா நடிப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டதாம். விரைவில் அதிகாரப்பூர்வமாக இதை படக்குழு வெளியிட உள்ளதாம். பிரகாஷ் ராஜ் முக்கிய ரோலில் நடிக்க, வில்லனாக தெலுங்கு ஹீரோ நானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆஹா இவரும் இருக்காரா
இதைத் தொடர்ந்து லேட்டஸ்ட் அப்டேட்டாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் என்னவென்றால் தளபதி 66 படத்திற்கு கார்த்திக் பழனி தான் ஒளிப்பதிவு செய்ய போகிறாராம். கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், இந்தியில் லவ் ஷாகுன் ஆகிய படங்களுக்கு கேமிரா மேன் இவர் தான். அது மட்டுமல்ல தற்போது ரூ.500 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் ஆதிபுருஷ் படத்திற்கும் இவர் தான் கேமிரா மேனாக பணியாற்றி வருகிறாராம்.

ஆர்வத்தின் உச்சத்தில் விஜய் ரசிகர்கள்
டைரக்டர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன் நடித்து வரும் ஆதிபுருஷ், ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார். இந்த பிரம்மாண்ட படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருபவரை தான் தளபதி 66 படத்திற்கும் புக் செய்திருக்கிறார்களாம். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் விஜய் ரசிகர்களை ஆர்வத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்று, கொண்டாட வைத்துள்ளது.

தளபதி 66 என்ன ரேஞ்சில் இருக்கும்
அத்தனை பிரம்மாண்டமான மெகா பட்ஜெட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறவர் தளபதி 66 படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய போகிறார் என்றால், தளபதி 66 படம் எப்படி இருக்கும் என இப்போதே ஆச்சரியப்பட துவங்கி விட்டனர். மே மாதத்தில் தளபதி 66 ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











