தளபதி 66 ல் இணையும் மற்றொரு டாப் ஹீரோ...கேட்கவே அட்டகாசமா இருக்கே

சென்னை : விஜய் நடிக்கும் தளபதி 66 படம் பற்றி தினம் ஒரு அப்டேட் வெளியாகி வருவதால், ரசிகர்கள் உற்சாகமாகி அடுத்த அப்டேட் என்னவாக இருக்கும் என எதிர்பார்க்க துவங்கி விட்டனர். இதனால் படத்தின் கதை என்னவாக இருக்கும் என இப்போதே அலசி ஆராய துவங்கி விட்டனர்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் படம், பெரிய ஏமாற்றத்தை தந்ததால் அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்க்க துவங்கி விட்டனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப படம் பற்றி தினம் ஒரு தகவல் வெளியாகி வருகிறது.

தளபதி 66 ஷுட்டிங்

தளபதி 66 ஷுட்டிங்

பீஸ்ட் படத்தால் அப்செட்டில் ரசிகர்களிடம் தளபதி 66 பற்றி ஓவர் பில்டப் கொடுத்தால் சரியாக இருக்காது என்பதால் ஒரு தகவலையும் பார்த்து பார்த்து வெளியிட்டு வருகிறார்கள் படக்குழுவினர். ஏப்ரல் 6 ம் தேதி பூஜையுடன் சென்னையில் துவங்கப்பட்ட தளபதி 66 படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் மிக சில நாட்களே மட்டுமே சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட ஷுட்டிங் வரும் வாரத்தில் துவங்கப்பட உள்ளதாம்.

விஜய் வைத்த கோரிக்கை

விஜய் வைத்த கோரிக்கை

இரண்டாம் கட்ட ஷுட்டிங்கை ஐதராபாத்தில் நடத்த டைரக்டர் வம்சி பிளான் செய்திருந்தார். ஆனால் தமிழ் திரைப்பட தொழிலாளர் சங்கத்தினருக்கு உதவுவதற்காக அதை சென்னையிலேயே நடத்த விஜய் கேட்டுள்ளார். வேறு வழியில்லாமல் ஓகே சொன்ன படக்குழுவினர், சென்னையிலேயே பிரம்மாண்ட செட்டை அமைத்து வருகிறார்கள்.

விஜய்க்கு அண்ணனாகும் மோகன்

விஜய்க்கு அண்ணனாகும் மோகன்

தளபதி 66 படத்தில் விஜய்க்கும் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். வில்லனாக விவேக் ஓபராய் நடிக்கிறார் என கூறப்பட்ட நிலையில் நேற்று, விஜய்க்கு அண்ணனாக தமிழ் சினிமாவின் வெள்ளிவிழா நாயகன் மைக் மோகன் நடிப்பதாக அப்டேட் வெளியிடப்பட்டது. கதைப்படி விஜய்க்கு இரண்டு அண்ணன்களாம். சரத்குமாரின் மூன்றாவது மகன் ரோலில் தான் விஜய் நடிக்கிறார்.

இன்னொரு அண்ணன் இவரா

இன்னொரு அண்ணன் இவரா

லேட்டஸ்ட் தகவலாக, விஜய்யின் மற்றொரு அண்ணன் ரோலில் நடிக்க தெலுங்கு அல்லது மலையாள திரையுலகை சேர்ந்த ஒரு டாப் நடிகரிடம் பேசப்பட்டு வருகிறதாம். தளபதி 66 படத்தில் மோகன்லால் அல்லது நாகர்ஜுனா நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டதால் இவர்களில் ஒருவர் விஜய்க்கு அண்ணன் ரோலுக்காக தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மோகன்லால் ஏற்கனவே விஜய்யின் ஜில்லா படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்துள்ளார். இவர்களின் காம்போ படத்திற்கு பெரிய வெற்றியை தந்தது. இதனால் மோகன்லால் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இவர் கரெக்டா இருப்பாரா

இவர் கரெக்டா இருப்பாரா

ஆனால் அப்பா ரோலில் சரத்குமார் நடிப்பதால், மோகன்லாலை அவருக்கு மகன் என்றால் சரியாக இருக்காது. அதனால் நாகர்ஜுனாவை நடிக்க வைக்கலாம் என ஏராளமானோர் கருத்து கூறி வருகிறார்கள். தோழி படத்தில் கார்த்தி உடன் நடித்த நாகர்ஜுனா, இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தால் புதிய காம்போ ரசிகர்களை கவரும் என படக்குழு நினைக்கிறதாம்.

விறுவிறுப்பாக தயாராகும் இசை

விறுவிறுப்பாக தயாராகும் இசை

தளபதி 66 படத்திற்கு பாடல் வரிகள், தமிழ் வெர்சனின் வசனங்கள், திரைக்கதை ஆகியவற்றை பாடலாசிரியர் விவேக் எழுதுவதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் படத்திற்கான இசையை இரவு - பகலாக தயார் செய்து வருகிறாராம் தமான். மியூசிக் மிரட்டலாக இருக்க வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் தில்ராஜுவும் தமான் உடனேயே இருந்து கண்காணித்து வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X