நாங்களும் தட்டி தூக்குவோம்...தளபதி 67 உடன் போட்டி போடும் தளபதி 66
சென்னை : விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வந்தாலும், அதை விட அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 67 படம் பற்றிய அப்டேட்கள் தான் அதிகம் வந்து கொண்டிருக்கிறது. தளபதி 67 பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருப்பதால் கிட்டதட்ட ரசிகர்கள் தளபதி 66 படத்தையே மறந்து விட்டனர்.
தளபதி 67 படம் பற்றி அப்டேட்கள் வந்து எதிர்பார்ப்பை ஒருபுறம் அதிகரிக்க செய்து வருகிறது. அதே சமயம் தளபதி 66 படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்கள், வீடியோக்கள் லீக்காகி வருவதால் பீஸ்ட் படத்தை போல் தளபதி 66 படமும் ஆகி விடுமோ என ரசிகர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
தளபதி 67 பட ஷுட்டிங்கை எப்போது துவக்க போகிறார்கள் என்றே தெரியவில்லை. அக்டோபரில் துவங்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில் படத்தின் கதை, டைட்டில் வரை தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாங்களும் தட்டி தூக்குவோம்
இப்போது தளபதி 66 டீம் என்ன செய்ய போகிறது. வம்சி பைடபள்ளி என்ன தான் செய்து கொண்டிருக்கிறார் என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர். ஆனால், பீஸ்ட் படத்தை அனைவரும் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்து கடைசி நேரத்தில் கமலின் விக்ரம் படம் தட்டி தூக்கியது போல் தளபதி 66 படமும் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும் என விஜய் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

அடுத்து எடுக்கப் போகும் காட்சிகள்
ரசிகர்களின் நம்பிக்கையை கொஞ்சமும் வீணடிக்காமல் ஒரே சமயத்தில் பல அப்டேட்கள் தளபதி 66 படக்குழு தரப்பில் வெளியாகி உள்ளது. தளபதி 66 படத்தின் ஷுட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தில் நான்காம் கட்ட ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம். இதில் பிளாஷ் பேக் காட்சிகள் எடுக்கப்பட உள்ளனவாம்.

இரட்டை வேடத்தில் விஜய்
அதே போல் தளபதி 66 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இரண்டு கேரக்டர்களுமே ஸ்டிராங்கான கேரக்டர்கள் தானாம். இருவருக்கும் தனித்தனியாக ஃபிளாஷ்பேக், சென்டிமென்ட் காட்சிகள் உள்ளதாம். இதில் ஒரு கேரக்டர் தான் இரண்டு குழந்தைகளுக்கு அப்பா கேரக்டராம். இந்த சென்டிமென்ட் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளதாம்.

அப்போ இவர் நடிப்பது கன்ஃபார்மா
தளபதி 66 படத்தில் கெஸ்ட் ரோலில் மகேஷ்பாபு நடிக்கிறார் என்பதை மலையாள நாளிதழ் ஒன்று உறுதி செய்துள்ளது. படத்தை 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதால் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜுன் 21 ம் தேதி மாலை 6 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட உள்ளது. இதற்கான போட்டோஷுட் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.

வம்சி எடுத்த அதிரடி முடிவு
சமீபத்தில் தளபதி 66 படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. விஜய் - குஷ்பு இருக்கும் காட்சிகள், இதை வைத்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வந்தனர். இதனால் இதுவரை லீக்கான காட்சிகளை மீண்டும் வேறு மாதிரி மாற்றி எடுக்க வம்சி பைடபள்ளி பிளான் செய்துள்ளாராம்.

தளபதி 66 டைட்டில் இது தானா
படத்தின் ஃபஸ்ட்லுக்குடன் சேர்த்து படத்தின் டைட்டிலையும் சேர்த்து வெளியிட படக்குழு பிளான் செய்துள்ளதாம். விஜய்யின் கேரக்டர் பெயர் தான் படத்தின் டைட்டிலாம். தளபதி 66 டைட்டில் 'கா' என்ற எழுத்தில் துவங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கா என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயர்களை ரசிகர்கள் அதிகம் தேடி வருகிறார்கள். டைட்டில் என்னவாக இருக்கும் என்பதை யூகிக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











