Don't Miss!
- Lifestyle
இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாதாம்... மீறி சாப்பிட்டா புற்றுநோய் வர வாய்பிருக்காம்!
- Sports
இவ்வளவு ஓட்டம் உனக்கு தேவையா? எதுக்கு அந்த குழப்பம்.. அர்ஷ்தீப் தவறை புட்டு வைத்த சஞ்சய் பங்கர்
- News
"ஆளும் அரசை விமர்சிக்க நான் என்ன எதிர்க்கட்சித் தலைவரா".. கேரள ஆளுநரின் திடீர் மனமாற்றம் ஏன்?
- Finance
ஒரே நாளில் 8 பில்லியன் டாலர் இழப்பு.. Intel வீழ்ச்சி ஆரம்பமா..?
- Automobiles
12 ஆயிரம் குதிரைகளின் பவரை கொண்ட ரயில் இன்ஜின்! உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த கவுரவம்!
- Technology
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
Thalapathy 67 Cast: த்ரிஷா மட்டும் இல்லை.. தளபதி 67 படத்துல இந்த ஹீரோயினும் இருக்காங்களா?
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 67 படத்தின் பூஜை கடந்த டிசம்பர் 5ம் தேதி சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் போடப்பட்டது.
ஆனால், அதுதொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதற்கு காரணம் வாரிசு படத்தின் ரிலீஸ் தான் என்கின்றனர்.
இந்நிலையில், அந்த பட பூஜையில் யாரெல்லாம் கலந்து கொண்டனர் என்கிற தகவல்கள் காத்து வாக்குல கசிந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன
தளபதி 67 பூஜைக்கு நாள் குறித்த லோகேஷ்… வெறித்தனமாக ரெடியாகும் விஜய்… அந்த டைட்டில் டீசர்..?

பூஜை போட்டாச்சு
ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள பிள்ளையார் கோயிலில் எளிமையான முறையில் படு ரகசியமாக தளபதி 67 படத்தின் பூஜை போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள இந்த படம் எல்சியூவா இல்லையா? என்கிற விவாதமே சோஷியல் மீடியாவில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த பூஜையில் யாரெல்லாம் கலந்து கொண்டனர் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன.

த்ரிஷா ஹீரோயின்
தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் சமந்தா நடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், சமந்தாவுக்கு பதில் த்ரிஷா நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், தளபதி 67 பூஜையில் த்ரிஷா கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஷால் இல்லை
விக்ரம் கிளைமேக்ஸில் எப்படி சூர்யா வந்தாரோ அதே போல தளபதி 67 படத்தில் விஷாலை அதிரடியாக வில்லனாக இறக்கலாம் என லோகேஷ் கனகராஜ் நினைத்திருந்த நிலையில், இந்த படத்தில் விஷால் நடிக்கவில்லை என்றும் நடிகர் அர்ஜுன் அந்த ரோல் செய்யப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், சாண்டி மாஸ்டரும் வில்லன் ஆட்களில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்னொரு ஹீரோயின்
விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ள நிலையில், தளபதி 67 படத்தில் இன்னொரு சூப்பரான ஹீரோயினும் கமிட் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வணக்கம் சென்னை, எல்கேஜி, எதிர்நீச்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை பிரியா ஆனந்த் தான் அந்த ஹீரோயின் என்றும் தளபதி 67 பூஜையில் அவரும் கலந்து கொண்டார் என பரபரப்பான தகவல்கள் கசிந்துள்ளன.

மிரட்டல் வில்லன்கள்
கேஜிஎஃப் 2 படத்தில் வில்லனாக நடித்த சஞ்சய் தத் தளபதி 67 படத்தில் மெயின் வில்லனாக நடிக்கப் போவது கன்ஃபார்ம் ஆகி உள்ளது. மேலும், அர்ஜுன், சாண்டி மற்றும் மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் வில்லன் கேங்கில் இருப்பார்கள் என தெரிகிறது. இது கேங்ஸ்டர் படம் என்பதால் மெயின் வில்லனே விஜய் தானா? அல்லது இந்த படத்தில் பாசிட்டிவ் கேரக்டரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

வாரிசுக்காக
பட பூஜையை தொடர்ந்து பிரசாத் ஸ்டூடியோவில் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான போட்டோஷூட்டும் நடைபெற்றது என்றும் வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தில் இருந்து ரசிகர்களின் கவனம் இந்த படத்துக்கு சிதறி விடக் கூடாது என்பதால் தான் ரகசியமாக வைத்துள்ளனர் என்றும் விரைவில் தளபதி 67 படத்தின் பூஜை புகைப்படங்களும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
முன்னாள் கணவரை பார்த்ததும் மூடு மாறிடுச்சு போல.. இப்படி கட்டித் தழுவுறாரே அர்ஜுன் கபூர் காதலி!
-
முரட்டுக்காளை ரயில் ஃபைட்டை மறக்க முடியாது.. ஜூடோ ரத்தினத்துக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் பேட்டி
-
சூர்யா - ஜோதிகா ஜோடியா யாரு வீட்டுக்கு போயிருக்காங்க பாருங்க.. எல்சியூக்குள்ள பிரித்விராஜும் வராரா?