தளபதி 67 படம் எல்சியூவே இல்லையா? கடைசி வரை ஓகே சொல்லாத விஜய்.. இது ஸ்டாண்ட் அலோன் படம் தான்?

சென்னை: ரசிகர்கள் சண்டையை பார்த்து டென்ஷனான நடிகர் விஜய் கடைசி வரை லோகேஷ் கனகராஜின் விக்ரம் யூனிவர்ஸ்க்குள் தான் வரப்போவதில்லை என்கிற முடிவை எடுத்து விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தளபதி 67 படத்தின் அதிரடியான அறிவிப்பு நேற்று வெளியானது. படத்தில் நடிக்க உள்ள பாதி பேர் லிஸ்ட்டை வெளியிட்டு விட்டனர். கடைசி வரை நடிகை த்ரிஷாவின் ஆன்போர்ட் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் வைத்திருக்கும் நிலையில், அது ஸ்பெஷல் அறிவிப்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சத்யராஜ் குறித்த தகவல் லீக்கான நிலையிலும், அவரது ஆன்பொர்ட் குறித்த அப்டேட்டும் நேற்று வெளியாகவில்லை.

யாரெல்லாம் இருக்காங்க

யாரெல்லாம் இருக்காங்க

மாஸ்டர் படத்திலேயே ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும், பிரபலமான நடிகர்கள் வெகுசிலர் மட்டும் தான். ஆனால், தளபதி 67 படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு நடிகருக்கும் கண்டிப்பாக முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மிஸ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், சாண்டி மாஸ்டர் மற்றும் மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

எல்சியூ இல்லை

எல்சியூ இல்லை

கைதி படத்தையும் விக்ரம் படத்தையும் இணைத்து கடந்த ஆண்டு கோலிவுட்டில் புதிய லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவர்ஸை உருவாக்கி இருந்தார். ரோலக்ஸ் உள்ளிட்ட கதாபாத்திரங்களுடன் தனியாக இன்னும் சில படங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தளபதி 67 படம் எல்சியூ இல்லை என்றும் அது ஸ்டாண்ட் அலோன் படம் தான் என தகவல்கள் கசிந்துள்ளன.

ஆடியோ லாஞ்சுக்கே யாரும் வரல

ஆடியோ லாஞ்சுக்கே யாரும் வரல

தளபதி 67 படம் தனிப்படம் என்பதால் தான் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட யாருமே கலந்து கொள்ளவில்லை என்றனர். இந்நிலையில், தளபதி 67 படம் தனிப்படமாகவே உருவாக உள்ளதாக கூறுகின்றனர்.

மாஸ்டர் கனெக்‌ஷன் இருக்குமா

மாஸ்டர் கனெக்‌ஷன் இருக்குமா

மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் இணைந்த நிலையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றதை போல காப்பு வைத்து லோகேஷ் உடன் விஜய் மோதுவது போன்ற போஸ்டர் வெளியானதில் இருந்தே மாஸ்டர் படத்தின் கனெக்‌ஷன் இருக்குமா? என்கிற கேள்வியும் எழுந்து வருகிறது. ஆனால், அதற்கும் வாய்ப்பு இல்லை என்றும் நடிகர் விஜய் தன்னை வைத்து புது யூனிவர்ஸ் படத்தையே உருவாக்க லோகேஷுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடைசியில் கனெக்ட்

கடைசியில் கனெக்ட்

இந்த படம் தளபதி விஜய்யின் ஸ்டான்ட் அலோன் படமாக வெயிட்டான கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டு விக்ரம் 3 படத்தில் கடைசியில் கனெக்ட் பண்ணப் பட்டாலும் படலாம் என்றும் ஆனால், இந்த படத்தில் அது குறித்த எந்தவொரு அறிகுறியை கூட படத்தில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு படம் உருவாகும் எனக் கூறப்படுகின்றன. எப்படி இருந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு பக்காவான வேட்டை காத்திருக்கிறது அதுபோதும் என குஷியில் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X