அடுத்த மாஸ் ஹிட்...தளபதி 67 அப்டேட்டும் வந்தாச்சு... டைரக்டர் இவர் தானா ?

சென்னை : மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து விஜய்யின் 65 வது படமாக பீஸ்ட் படம் தயாராகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் 80 சதவீதம் வேலைகள் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

மீதமுள்ள 20 சதவீதம் படப்பிடிப்பை முடிக்க பீஸ்ட் டீம் விரைவில் மீண்டும் ஜார்ஜியா செல்ல உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு பீஸ்ட் படம் ரிலீஸ் ஆகி, அஜித்தின் வலிமையுடன் மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பீஸ்ட் படத்தை 2022 ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பீஸ்ட்டை எதிர்பார்க்கும் ரசிகர்கள்

பீஸ்ட்டை எதிர்பார்க்கும் ரசிகர்கள்

விஜய்யின் பிறந்தநாளன்று பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் படத்தின் டைட்டிலும் வெளியிடப்பட்டதோடு சரி, அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் அதற்குள் விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படம் பற்றிய அறிவிப்புக்கள் வெளியாகி பரபரக்க வைத்து வருகின்றன.

தளபதி 66 உறுதியானது

தளபதி 66 உறுதியானது

தளபதி 66 படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்க போவதாகவும், இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்க கியாரா அத்வானி முடிவாகி இருப்பதாகவும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் வில்லன் அல்லாத மிக முக்கிய ரோலில் நடிக்க போவதாகவும், விஜய்யின் மகளாக மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா நடிக்க போவதாகவும் கூறப்பட்டது.

2022 ல் தளபதி 66

2022 ல் தளபதி 66

பீஸ்ட் படத்தை முடித்த பிறகு தளபதி 66 படத்தின் வேலைகளை விஜய் துவக்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்கிடையில் இந்த ஆண்டு இறுதி முதல் தளபதி 66 பற்றிய அப்டேட்கள் வர துவங்கும் என டைரக்டர் வம்சி சமீபத்தில் கூறி இருந்தார். இதனால் 2022 ம் ஆண்டு துவக்கம் முதலே தளபதி 66 படத்தின் வேலைகளை துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தளபதி 67 டைரக்டர் இவரா

தளபதி 67 டைரக்டர் இவரா

இந்நிலையில் தளபதி 67 படம் பற்றிய முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தையும் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க போகிறாராம். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க போகிறாராம். மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் மீண்டும் இணைய உள்ள தகவல் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

மீண்டும் இணையும் கூட்டணி

மீண்டும் இணையும் கூட்டணி

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் தற்போது கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விக்ரம் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் வேலைகளை லோகேஷ் கவனிக்க போகிறாராம். அதற்கு பிறகு கமலுடன் மற்றொரு படத்தில் மீண்டும் இணைய போகிறாராம் லோகேஷ் கனகராஜ்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இதனால் கோலிவுட்டில் இனி அடுத்தடுத்து பல மெகா ஹிட் படங்களை எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் இப்போதே பேச துவங்கி விட்டனர். விரைவில் இந்த படங்கள் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட உள்ளனவாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X