அதுக்குள்ள தளபதி 67 அப்டேட்டும் வந்தாச்சா...அடடா செம மாஸ் அப்டேட்டா இருக்கே
சென்னை : விஜய் நடித்துக் கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தின் அப்டேட்கள் வந்து முடிப்பதற்குள் விஜய் நடிக்க போகும் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருவதால் விஜய் ரசிகர்கள் தாறுமாறு கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.
மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஏப்ரல் 14 ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக அரபிக்குத்து பாடல் வெளியிடப்பட்டது. அஜிருத் இசையமைத்து பாடிய இந்த பாடல் 125 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

விரைவில் பீஸ்ட் டீசர்
பீஸ்ட் படத்தின் டீசர் ரெடியாக விட்டதாகவும், விரைவில் இது வெளியிடப்படலாம் என விஜய் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். பீஸ்ட் ஷுட்டிங் முடிவதற்கு முன்பே விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்க போவதாகவும், அதை தில் ராஜு தயாரிக்க போவதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. தளபதி 66 படத்திற்கு தமன் இசையமைக்க போவதாகவும், இந்த படம் விஜய்யின் கெரியரில் மற்றொரு பிரேக் கொடுப்பதாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

தளபதி 66 ஷுட்டிங் எப்போ
தளபதி 66 படத்தின் ஷுட்டிங் மே மாதத்தில் துவங்கப்படலாம் என்றும், இந்த படத்தை 2022 ம் ஆண்டு தீபாவளி அல்லது 2023ம் ஆண்டின் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தயாரிப்பாளர் தில் ராஜுவே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். விஜய்யின் முதல் பைலிங்குவல் படமாக உருவாகும் இந்த படம் மெகா பட்ஜெட் படமாக உருவாக்கப்பட உள்ளது. இதற்காக விஜய்க்கு 125 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக பல மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியானது.

வலிமையை மிஞ்சுமா பீஸ்ட்
இதனால் பீஸ்ட், தளபதி 66 படங்களின் அப்டேட்களை ரசிகர்களை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதிலும் அஜித் நடித்த வலிமை படம் முதல் நாளே, பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்ததுடன், ஒரே வாரத்தில் 200 கோடி கிளப்பிலும் இணைந்துள்ளது. இதனால் பீஸ்ட் படத்தின் வசூல் எப்படி இருக்கும், வலிமை சாதனையை பீஸ்ட் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடம் அதிகம் காணப்படுகிறது.

தளபதி 67 அப்டேட் வந்தாச்சா
இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தின் அப்டேட்களும் வெளியாக துவங்கி விட்டன. லேட்டஸ்ட் தகவலின் படி தளபதி 67 படத்தை, விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய டைரக்டர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க போகிறாராம். லோகேஷ் கனகராஜ் தற்போது கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். விஜய், லோகேஷ் கனகராஜ் இருவரும் தாங்கள் தற்போது கமிட்டாகி உள்ள படங்களை முடித்த பிறகு தளபதி 67 படத்தின் வேலைகள் துவங்கப்பட உள்ளதாம். கடந்த ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக மாஸ்டர் படம் வெளியிடப்பட்டது. தியேட்டர்களில் 50 சதவீதம் பேர் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே தியேட்டர்களில் வெளியாகி 100 கோடி வசூல் பார்த்து, தியேட்டர்களுக்கு நம்பிக்கை தந்த படம் மாஸ்டர். அதனால் விஜய் -லோகேஷ் கனகராஜ் இணையும் படம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் இப்போதே கொண்டாட துவங்கி விட்டனர்.
Recommended Video

ஆஹா...செம காம்போவா இருக்கே
ஏற்கனவே தளபதி 67 படத்தை அட்லீ இயக்க போவதாக வேறு ஒரு தகவல் பரவி வந்தது. சமீபத்தில் அட்லீ, நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் மூவரும் இருப்பதை விஜய் போட்டோ எடுத்த போட்டோ வெளியானது. இதனால் தளபதி 67 படத்தை இயக்க போவது அட்லீயா, லோகேஷ் கனகராஜா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தான் விஜய்யை மீண்டும் இயக்க போகிறார் என்பது உறுதியாகி விட்டதாம். விரைவில் இந்த படம் பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டு, அடுத்தடுத்த அப்டேட்கள் வர போகிறதாம்.


Click it and Unblock the Notifications











