Don't Miss!
- News
ரத கஜ துரக பதாதிகள்..ஈரோட்டில் கிழக்கில் திமுக படைத்தளபதிகள்..சிந்தாமல் சிதறாமல் "சக்கர வியூகம்"
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சத்தமே இல்லாமல் தொடங்கிய தளபதி 67 படப்பிடிப்பு…லோகேஷின் தரமான சம்பவம் இனிமேல் ஆரம்பம்!
சென்னை : தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று சத்தமே இல்லாமல் தொடங்கி உள்ளது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படமாக அமைந்து வசூலைவாரிக்குவித்தது.
பாலிவுட் கவனத்தை ஈர்த்த மாநகர திரைப்படம் இந்தியில் மும்பைக்கார் என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. இதில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
வெறித்தனம் தான் போங்க.. தளபதி 67-ஏ தனி யூனிவர்ஸ் ஆகிடும் போல.. கெளதம் மேனனும் இணைந்து விட்டார்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் 4 படங்களை மட்டுமே லோகேஷ் இயக்கி இருந்தாலும், இளசுகள் முதல் பெரிசுகள் வரை லோகேஷ் கனகராஜின் ரசிகர்களாகவே மாறிவிட்டனர். இவர் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களில், போதைப்பொருள் சார்ந்த கதைக்கரு முக்கியமானதாக இடம்பெற்று இருந்தன.

தளபதி 67
தளபதி 67 பட வேலையில் மும்முரமாக இறங்கிய உள்ள லோகேஷ் கனகராஜ், கதையில் கவனம் செலுத்துவதற்காக சோஷியல் மீடியாவிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்திருந்தார். இப்படத்திற்கு தளபதி 67 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான பூஜை கடந்த சில மாதங்களுக்கு முன் ஆடம்பரமே இல்லாமல் நடந்து முடிந்தது.

விஜய்க்கு ஜோடி த்ரிஷாவா?
இப்படத்தில், நடிகர் மன்சூர் அலிகான்,இயக்குநர் கௌதம் மேனன்,விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன், த்ரிஷா இணைந்து நடிக்க விருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

தளபதி 67 படப்பிடிப்பு ஆரம்பம்
இந்நிலையில், தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் சத்தமே இல்லாமல் தொடங்கி உள்ளது. இந்த தகவலை நடிகரும் இயக்குநருமான மனோ பாலா தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தளபதி 67 படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. லோகேஷ் கனகராஜ் எங்கள் தளபதியை சந்தித்தார்.. அதே ஆற்றல் மற்றும் முழு வீச்சில்.. முதல் நாளே.. தூள்.. என பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த தளபதி67 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். லோகேஷ் கனகரபாஜின் தரமான சம்பவத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

பொங்கலுக்கு ரிலீஸ்
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 12ந் தேதிபொங்கல் பாண்டிகையொட்டி வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தானா, சரத்குமார்,ஷாம், எஸ்.ஜே.சூர்யா,குஷ்பு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

ஹிட்டடித்த பாடல்கள்
வாரிசு படத்தில் இருந்து விஜய் மற்றும் மானசி இணைந்து பாடிய ரஞ்சிதமே பாடல் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. அதே போல தீ தளபதி பாடலும், அம்மா பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விஜய்யின் தீவிர ரசிகர்கள் வாரிசு படத்தின் டீசரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.