Don't Miss!
- News
வடமாநிலத்தவர்களே தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கிறார்கள்.. நாம் தமிழர் சீமான் பரபரப்பு
- Sports
ஆரம்பமே இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்த நியூசி.. உம்ரான் அதிரடி நீக்கம்.. பிளேயிங் லெவன் மாற்றம்
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Finance
வருமான வரியை குறைக்க டிப்ஸ்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
டாம் க்ரூஸ் படம் போல இருக்கும்.. தளபதி 67 சாதாரண கேங்ஸ்டர் படம்லாம் இல்லைங்கோ.. செம ஹாட் அப்டேட்!
சென்னை: விக்ரம் படம் மூலம் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்.
சமீபத்தில் படத்திற்கான பூஜை போடப்பட்ட நிலையில், சத்தமே இல்லாமல் பிரசாத் லேப்பில் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளதாம்.
இந்த படம் சாதாரண கேங்ஸ்டர் படமாக எல்லாம் இல்லாமல் டாம் க்ரூஸ் படம் ரேஞ்சுக்கு இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோகேஷ்
ஹிட்
லிஸ்ட்டில்
சியான்
விக்ரம்,
ராகவா
லாரன்ஸ்...
அடுத்தடுத்து
அரங்கேறும்
சீக்ரெட்
மிஷன்ஸ்

மாஸடரிலேயே மிரட்டல்
இதுவரை ரசிகர்கள் பார்த்திராத விஜய்யை கண் முன்னே காட்டி கெத்துக் காட்டி இருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். கொரோனா லாக்டவுன் 50 சதவீதம் இருக்கை என்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மாஸ்டர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வேறலெவலில் இருந்திருக்கும். கடைசி அந்த கிளைமேக்ஸ் சண்டையையும் கொஞ்சம் மாத்தியிருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்தன.

விக்ரம் யூனிவர்ஸ்
மாஸ்டர் படத்தில் எங்கெல்லாம் தவறு செய்தோமோ அதையெல்லாம் கொஞ்சமும் விக்ரம் படத்தில் செய்து விடக் கூடாது என மெனக்கெட்டு உழைத்ததன் பயன் விக்ரம் படம் 450 கோடி வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. கமலின் விக்ரம் படத்துடன் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கி புதிதாக ஒரு யூனிவர்ஸையே க்ரியேட் செய்து விட்டார்.

பான் இந்தியா
விஜய்யின் வாரிசு படம் கூட பான் இந்தியா படம் இல்லை. ஆனால், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட ஏகப்பட்ட வில்லன்கள் இந்த படத்தில் உள்ளனர். நாயகியாக த்ரிஷா நடிக்க உள்ளார். பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் கலக்க உள்ளார்.

டாம் க்ரூஸ் படம் போல
தளபதி 67 படம் வெறும் சாதாரண லோக்கல் கேங்ஸ்டர் படமாக இல்லாமல் டாம் க்ரூஸ் படங்களை போல ஹாலிவுட் லெவலில் மிஷன் இம்பாசிபிள் ஸ்டைலில் உருவாகப் போவதாக ஹாட் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரசாத் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு ஆரம்பித்துள்ள நிலையில், விரைவில் காஷ்மீர், டெல்லி என இந்தியா முழுவதும் படக்குழு இந்த படத்தின் படப்பிடிப்புக்காக பயணிக்க போகிறதாம்.

பிசினஸ் எகிறும்
விக்ரம் படம் 450 கோடி வசூலை தாண்டி சென்ற நிலையில், அடுத்ததாக தளபதி 67 படத்தின் பிசினஸ் 500 கோடிக்கும் அதிகமாக டார்கெட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டு வருகிறதாம். கன்னட திரைப்படமான கேஜிஎஃப், தெலுங்கு திரைப்படமான ஆர்ஆர்ஆர் படங்கள் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் சென்றுவிட்ட நிலையில், நடிகர் விஜய்யை வைத்து பெரிய சம்பவத்தை செய்ய லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.

வாரிசு ஆடியோ லாஞ்சுக்கு
வரும் டிசம்பர் 22ம் தேதி வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் ஷாருக்கான், லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய் என்ன பேசப் போகிறார் இசை வெளியீட்டு விழா எப்படி நடக்கப் போகிறது என்பதை காண ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினர் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வாரிசு பட ரிலீஸை தொடர்ந்து தளபதி 67 படத்தின் பணிகள் சூடு பறக்கும் என தெரிகிறது.