»   »  காலாவில் 'தளபதி' கனெக்ஷன் இருக்கா, இல்லையா?: உண்மை இதோ

காலாவில் 'தளபதி' கனெக்ஷன் இருக்கா, இல்லையா?: உண்மை இதோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தின் காலா படத்தில் மம்மூட்டி நடிக்கிறாரா, இல்லையா என்பது தெரிய வந்துள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா. படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பியுள்ளார்.


அடுத்த கட்ட படப்பிடிப்பில் வரும் 24ம் தேதி கலந்து கொள்கிறார் ரஜினி.


மம்மூட்டி

மம்மூட்டி

காலா படத்தில் மம்மூட்டி கவுரவத் தோற்றத்தில் அதுவும் அம்பேத்கராக நடிக்கக்கூடும் என்று கூறப்பட்டது. இதற்கிடையே ஹீரோயின் ஹூமா குரேஷி வெளியிட்ட தகவலின்படி படத்தில் பீம்ஜி இருப்பது தெரிய வந்தது.


இல்லை

இல்லை

பீம்ஜி என்பது அம்பேத்கரின் பெயர் ஆகும். அதனால் காலாவில் மம்மூட்டி நடிக்கிறார் என்று ரசிகர்கள் உறுதி செய்தனர். ஆனால் மம்மூட்டி நடிக்கவில்லையாம்.


 ஏமாற்றம்

ஏமாற்றம்

தளபதி படத்தை அடுத்து காலாவில் ரஜினியும், மம்மூட்டியும் சேர்வார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ரஜினி, மம்மூட்டியை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 தனுஷ்

தனுஷ்

காலா படத்தை தயாரிக்கிறார் தனுஷ். படத்தில் அவர் இளம் வயது ரஜினிகாந்தாக நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தியை கேட்டு தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


English summary
Here is a disappointing news for the fans of Mammootty and Rajinikanth, who were eagerly waiting for the reunion of the Thalapathi duo. It has been confirmed that Mammootty is not a part of Rajinikanth's upcoming project, Kaala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil