»   »  கவலையில் தல ரசிகர்கள்: துள்ளிக் குதிக்கும் தளபதி ரசிகர்கள்

கவலையில் தல ரசிகர்கள்: துள்ளிக் குதிக்கும் தளபதி ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தளபதி ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக வெளியாக உள்ளது பைரவா படத்தின் டீஸர்.

இந்த தீபாவளிக்கு தல, தளபதி படங்கள் ரிலீஸாகவில்லை. படங்கள் வராவிட்டாலும் டீஸர், ட்ரெய்லராவது வெளியாகுமா என தல, தளபதி ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.


Thalapathy fans get Diwali treat

இதில் தல ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அஜீத்தின் தல 57 டீஸரோ, ட்ரெய்லரோ தீபாவளிக்கு வெளியாகாதாம். இந்நிலையில் தான் விஜய் நடித்து வரும் பைரவா படத்தின் டீஸர் 28ம் தேதி இரவு 12.01 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தீபாவளி நாள் அன்று விடிந்தும் விடியாமலும் தளபதி ரசிகர்களுக்கு பரிசு கிடைக்கிறது. இந்த டீஸரை நிச்சயம் யூடியூப்பில் தெறிக்கவிட்டு புதிய சாதனை படைக்காமல் விட மாட்டார்கள் ரசிகர்கள்.


பைரவா படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Thalapathy fans are getting Diwali treat as Vijay's Bairavaa teaser will be releasing on october 28th at 12.01 am.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil