'தளபதி'யின் படத்திற்கு தலைப்பு சொல்லுங்களேன்!

By Mayura Akilan

விஜய் நடித்த துப்பாக்கி படத்தலைப்பிற்கு நேர்ந்த சிக்கல் ஊரறிந்த விசயம். இப்போது அவரது அடுத்த படத்திற்கு தலைப்பு வைப்பதில் மண்டையை குடைந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் ஏ.எல். விஜய்.

துப்பாக்கி படத்திற்குப் பின்னர் ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிப்பதாக விளம்பரங்கள் வெளியாகின.

இந்தப் படத்திற்கு என்னத் தலைப்பு வைப்பது என்பது பெரும் சிக்கலாகி, குழப்பமாகியுள்ளது. எந்த்த தலைப்பைத் தேர்வு செய்தாலும் அதற்கு சிலர் முட்டுக்கட்டையாக வருகின்றனராம்.

தலைவன் - தங்கமகன்

தலைவன் - தங்கமகன்

முதலில் இந்தப் படத்திற்குத் ‘தலைவன்' என்று பெயரிட்டனர். அதன் பின்னர் ‘தங்கமகன்' என்று மாறியது.இது 80களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம். இந்த தலைப்பை உபயோகப்படுத்தக்கூடாது என்று படத்தை தயாரித்தவர்கள் கூறிவிட்டனர். இதனால் வேறு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்து வருகின்றனர்.

குழப்பத்தில் விஜய் + விஜய்

குழப்பத்தில் விஜய் + விஜய்

படத்தின் இயக்குநர் திரைக்கதை, வசனம் கூட எழுதிவிடுவார் போல ஆனால் படத்தலைப்புதான் தலைவலியாக இருக்கிறது. ஏற்கனவே துப்பாக்கி படத்தில் நேர்ந்த அனுபவம் விஜய் கூட்டணியை வெகுவாக யோசிக்க வைத்திருக்கிறது என்றே கூறப்படுகிறது.

அஜீத் படத்துக்குப் பிறகுதான் பெயர்

அஜீத் படத்துக்குப் பிறகுதான் பெயர்

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் ஒரு படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. அதேபோல் விஜய் படமும் ஷூட்டிங் முடிந்த பின்னர்தான் பெயர் வைப்பார்கள் போல தெரிகிறது.

தல, தளபதிக்கு படங்களுக்கு யாராவது ஒரு நல்ல தலைப்பு இருந்தா சொல்லுங்களேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X