தெறிக்குது மாஸ்டர் FDFS.. போகி கொளுத்துறாங்களோ இல்லையோ.. தியேட்டரில் பக்காவா கொளுத்துறாங்க!

சென்னை: போகி பண்டிகை திருநாளான இன்று மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Recommended Video

Master Pongal | சூப்பர் கொண்டாட்டம் | Thalapathy Vijay, Vijay Sethupathi | Filmibeat Tamil

கிட்டத்தட்ட அதிகாலை 4 மணிக்கு ஷோ போட்டு ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில், மாஸ்டர் FDFS கொண்டாட்டத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் அமோகமாக கொளுத்தி கொண்டாடி வருகின்றனர்.

தளபதி விஜய்யின் மாஸ் என்ட்ரி வேற லெவல் என்றும் படம் தீயாக இருக்கு என்றும் பாசிட்டிவ் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

வெளியானது மாஸ்டர்

வெளியானது மாஸ்டர்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம், கொரோனா பரவல் காரணமாக ஒட்டுமொத்த திரைத்துறையும் சந்தித்த சிக்கல் காரணமாக பல மாதங்கள் கழித்து, 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

தியேட்டரில் போகி

போகிப் பண்டிகை திருநாளான இன்று மாஸ்டர் படம் வெளியாகி இருப்பதால், அதிகாலை 4 மணி காட்சியை காண ரசிகர்கள் முண்டியடித்து தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். ஏகப்பட்ட தளபதி விஜய் ரசிகர்களுக்கு இன்று தியேட்டர்களில் தான் போகி பண்டிகை கொண்டாட்டமே..

மாஸ்டர் இயக்குநர்

சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில், மாஸ்டர் படக்குழுவினர் அதிகாலை காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுடன் ரசிகராக மாறி மாஸ்டர் படத்தின் ஓப்பனிங்கை கூச்சலிட்டு கொண்டாடி வருகிறார்.

தீபாவளியான பொங்கல்

பொங்கல் திருநாளை முன்னிட்டு திரையரங்குகளில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உள்ளது. அதிகாலையிலேயே தியேட்டர்களில் மாஸ்டர் படத்தின் ரிலீசை முன்னிட்டு ரசிகர்கள் பட்டாசு மற்றும் வானவேடிக்கைகளை வெடித்து பொங்கல் பண்டிகையை தீபாவளியாக மாற்றி வருகின்றனர்.

அலைமோதும் கூட்டம்

தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ள நிலையில், ராம் சினிமாஸ் தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோத மாஸ்டர் படத்தின் FDFS கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

மாஸ்டர் படக்குழு

இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து நடிகர் சாந்தனு, இசையமைப்பாளர் அனிருத், நடிகர் அர்ஜுன் தாஸ், உள்ளிட்டோரும் மாஸ்டர் FDFS கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அனிருத், சாந்தனு உள்ளிட்ட பலரும் மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் மாஸ்டர் படத்தை கண்டு ரசித்தனர்.

களைகட்டிய தியேட்டர்கள்

கடந்த ஆண்டு பொங்கலுக்கு களைகட்டிய பல தியேட்டர்கள், தற்போது மாஸ்டர் படத்தின் ரிலீஸை முன்னிட்டு மீண்டும் களைகட்டி உள்ளன. வண்ண விளக்குகள், மாஸ்டர் ஆர்ச்சுகள், ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மாஸ்டர் படத்தின் FDFS மாஸாக கொண்டாடப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X