Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ரசிகர்களை தாக்கி விரட்டி அடித்த பவுன்சர்கள்..வீடியோவை பார்த்து ஷாக்கான பேன்ஸ்!
சென்னை : விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை, தாக்கி விரட்டி அடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
நடிகர் விஜய் தெலுங்கு படத்தில் முதன்முறையாக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு தமிழில் வாரிசு என்றும் தெலுங்கில் வாரிசுடு என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி பைடியபல்லி இயக்கி உள்ளார். வாரிசு திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் தயாரிக்க செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
அய்யோ என்ன இப்படி ஆகி போச்சு..வம்பில் சிக்கிய வாரிசு..நஷ்டத்தில் தயாரிப்பு நிறுவனம்!

வாரிசுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் தற்போது பொங்கல் பண்டியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு பிறகு தளபதி விஜயின் வாரிசு மற்றும் அஜித் குமாரின் துணிவு ஜனவரி 12 ஒரே நாளில் ரிலீஸாக உள்ளதால், துணிவா... வாரிசா என்று பட்டிமன்றம் வைக்கும் அளவுக்கு இணையத்தில் சண்டை போட்டு வருகின்றனர்.

என்ன படம் பாப்பீங்க
பல யூடியூப் சேனல்கள் பொதுமக்களிடம் துணிவு படம் பாப்பீங்களா, வாரிசு படம் பாப்பீங்களா என கேள்வி கேட்டு இணையத்தை திணறடித்து வருகின்றன அதே போல ஊடகங்களும் எந்த சினிமா பிரபலத்தைப் பார்த்தாலும் இதே கேள்வியை கேட்டு அவர்களை திக்குமுக்காட வைத்து வருகின்றனர். நாட்கள் நெருங்க நெருங்க இணையம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

இசைவெளியீட்டு விழா
இந்நிலையில் வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழா சனிக்கிழமை நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், விஜய்யின் மனைவி சங்கீதா,ஏ.எஸ்.சந்திரசேகர், ஷோபா, ராஷ்மிகா, சரத்குமார்,பிரகாஷ் ராஜ், நகைச்சுவை நடிகர் சதீஷ், இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ மோகன் தொகுத்து வழங்கினார்.

அன்புதான் ஆயுதம்
மாஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டிஸ்டாரி, அனைவரையும் கவர்ந்த நிலையில் வாரிசு விழாவில் என்ன பேசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தார். இதையடுத்து,மேடையில் மாஸ் எண்ட்ரி கொடுத்த விஜய், எனக்கு போட்டியாக 1992 இல் ஒரு நடிகர் வந்தார், அவரை ஜெயிக்க வேண்டும் என்று நான் ஓடினேன். ஆனால் அவர் எங்கு சென்றாலும் வந்து கொண்டே இருந்தார். இதனால், அவரை ஜெயிக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டே இருந்தேன் அது வேறுயாரும் இல்லை அந்த நடிகர் பேர் ஜோசப் விஜய்.. ஆம் அது நான்தான் என்றார். மேலும், அனைவர் இடத்திலும் அன்பாக இருங்கள் அன்புதான் ஆயுதம் என்றார்.

ரசிகர்களை தாக்கிய பவுன்சர்கள்
வாரிசு திரைப்படத்தின் விழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்த போது,சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியால் மேடையின் மீது ஏற முயன்றனர். அப்போது அங்கிருந்த பவுன்சர்கள் அவர்களை தடுத்து, எச்சரித்தனர். ஆனாலும் ரசிகர்கள் பவுண்சர்களை தாண்டி மேடை மீது ஏற முயன்றதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, பவுன்சர்கள் ரசிகர் ஒருவரின் சட்டையை பிடித்து தரதரவென்று இழுத்து வந்த தாக்கி வெளியில்விரட்டி விட்டனர். இணையத்தில் வெளியான இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் என்னத்தான் இருந்தாலும் ரசிகர்களை இப்படி அடித்து இருக்கக்கூடாது என்று கூறிவருகின்றனர்.